News May 2, 2024
பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறுமா CSK?

நேற்றுப் பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணி தோல்வியடைந்தது. நடப்பு ஐபிஎல் தொடரில் 10 போட்டிகளில் விளையாடி சென்னை அணி இதுவரை தலா 5 வெற்றி, தோல்விகளுடன் தரவரிசைப் பட்டியலில் 4ஆவது இடத்தில் உள்ளது. வரவிருக்கும் 4 லீக் போட்டிகளில் சென்னை அணி வெற்றி பெற்றால் மொத்தம் 18 புள்ளிகள் கிடைக்கும். இதில் குறைந்தது 3 போட்டிகளில் வென்றால் கூட பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறலாம்.
Similar News
News March 11, 2026
கரூர்: அடிக்கடி கரண்ட் கட் ஆகுதா?

கரூர் மக்களே, அதிக மின் கட்டணம், மின்தடை, மீட்டர் பழுது, மின் திருட்டு போன்ற புகார்களுக்கு இனி நேரடியாக மின்வாரிய அலுவலகம் செல்லத் தேவையில்லை. நீங்கள் உங்கள் வீட்டில் இருந்தபடியே, உங்கள் செல்போனில் <
News March 11, 2026
நடிகர் சீனிவாசன் காலமானார்.. சோகமான தகவல்

நடிகர், இயக்குநர், இசையமைப்பாளர், தயாரிப்பாளர் என பன்முக திறமை கொண்ட <<19351093>>தக்காளி சீனிவாசனை<<>> தமிழ் சினிமா இழந்துள்ளது. நீண்ட கால உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவரது உயிரை எமன் பறித்துச் சென்றார். தனது இறுதிக் காலத்தை பெங்களூருவில் கழித்த அவர், ஆசிரமம் நடத்தி பல குழந்தைகளை தத்தெடுத்து மனிதநேய சேவையாற்றி வந்தார். தற்போது, சீனிவாசனை இழந்து ஆசிரம குழந்தைகள் சோகத்தில் மூழ்கியிருப்பது பெரும் வேதனை.
News March 11, 2026
போர் கொடூரம்: தனித்து விடப்படும் வாயில்லா ஜீவன்கள்!

போருக்கு மத்தியில் வீடுகளை காலி செய்யும் மக்கள், தங்களது செல்லப்பிராணிகளை கைவிட்டு செல்லும் கொடூரம் துபாயில் அரங்கேறி வருகிறது. நேற்றுவரை அரவணைத்த கைகள் எங்கு சென்றன என்பது புரியாமல் பசியிலும், பயத்திலும் அவை தவிக்கின்றன. யாராவது அரவணைத்து கொள்ள மாட்டார்களா என அவற்றின் கண்களில் தெரியும் ஏக்கம் நெஞ்சை உலுக்குகிறது. போரின் கொடூரம் மனிதர்களை மட்டுமல்ல, வாயில்லாத ஜீவன்களையும் காயப்படுத்தியுள்ளது.


