News December 31, 2025

பள்ளிகள் திறப்பு.. மாணவர்களுக்கு மகிழ்ச்சி

image

அரையாண்டுத் தேர்வு விடுமுறை முடிந்து ஜன.5-ல் பள்ளிகள் திறக்கப்படவுள்ளது. இந்நிலையில், அன்றைய நாளே 3-ம் பருவத்துக்கான பாடப் புத்தகங்கள் & நோட்டுகள் வழங்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதனால், பள்ளிகளுக்கு புத்தகங்களை அனுப்பும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், புத்தகங்கள் வழங்கப்பட்ட பிறகு அவற்றை ‘Emis’ தளத்தில் பதிவேற்றவும் HM-களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Similar News

News January 7, 2026

வரலாற்றில் இன்று

image

*1938 – நடிகை சரோஜாதேவி பிறந்த தினம்.
*1953 – இயக்குநர் பாக்யராஜ் பிறந்தநாள்
*1959 – பிடல் காஸ்ட்ரோவின் அரசை USA அங்கீகரித்தது.
*1972 – பின்னணி பாடகர் எஸ்.பி.சரண் பிறந்தநாள்
*1980 – மீண்டும் இந்திரா காந்தி தலைமையிலான ஆட்சி அமைந்தது.

News January 7, 2026

‘பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக கிரிக்கெட் மாற்றம்’

image

Modern Day கிரிக்கெட் முற்றிலும் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக உள்ளது என டெஸ்ட் ஜாம்பவான் நீல் ஹார்வே கூறியுள்ளார். மணிக்கட்டை சுழற்றி பந்தை தட்டினாலே பவுண்டரி செல்லும் அளவிற்கு சக்திவாய்ந்த Bats பயன்படுத்தப்படுவதாக தெரிவித்துள்ளார். பல பலவீனமான அணிகள் சர்வதேச போட்டிகளில் ஆடுவதாகவும், அவர்களுக்கு எதிராக தானும் விளையாடி இருக்கலாம் என ஆசைப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதுபற்றி உங்க கருத்து?

News January 7, 2026

மதுரோவின் கைதின் போது 52 ராணுவ வீரர்கள் பலி

image

ஹாலிவுட் படத்தின் அதிரடி காட்சி போல் வெனிசுலா அதிபர் மதுரோவை அமெரிக்க படைகள் கைது செய்தனர். இதில் 55 வெனிசுலா மற்றும் க்யூபா ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 23 வெனிசுலா வீரர்களும், 32 க்யூபா வீரர்களும் உயிரிழந்துள்ளதாக இருநாடுகளும் தனித்தனியாக அறிவித்துள்ளன. முதலில் வெடிகுண்டு தாக்குதலை நடத்திய பின் அமெரிக்க ஹெலிகாப்டர்கள் வெனிசுலாவில் தரையிறங்கியுள்ளன.

error: Content is protected !!