News December 31, 2025

அரசியல் பேசும் ‘ஜனநாயகன்’

image

விஜய்யின் கடைசி படமான ‘ஜனநாயகன்’ அரசியல் படமா என்ற கேள்விக்கு, இயக்குநர் H வினோத் சூப்பர் அப்டேட் கொடுத்துள்ளார். கமர்ஷியல் படமாக இருந்தாலும் படத்தில் அரசியல் சார்ந்த பல அம்சங்களை வினோத் அதில் சேர்த்துள்ளாராம். அரசியல் கருத்துகளை படத்தில் வைக்க தயாரிப்பாளர் உறுதுணையாக இருந்ததாகவும், அவரே பல அரசியல் நிகழ்வுகளை சேர்க்க ஐடியாவும் கொடுத்துள்ளதாக பேட்டி ஒன்றில் இயக்குநர் தெரிவித்துள்ளார்.

Similar News

News January 26, 2026

புதன்கிழமை பள்ளிகள் விடுமுறை.. கலெக்டர் அறிவிப்பு

image

நாளை மறுநாள் (ஜன.28) மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி திருவாரூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டது. தற்போது, தாந்தோன்றிமலை கல்யாண வெங்கடரமண சுவாமி கோயில் குடமுழுக்கை ஒட்டி, கரூர் வட்டத்திற்கும் அன்றைய தினம் விடுமுறை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அங்கு ஜன.28-ல் பள்ளி, கல்லூரிகள் இயங்காது.

News January 26, 2026

குடியரசு தின கொண்டாட்டத்தில் இணைந்த கூகுள்

image

இந்திய நாட்டின் 77-வது குடியரசு தினத்தை ஒட்டி கூகுள், இஸ்ரோவின் சாதனைகளை கொண்ட சிறப்பு டூடுலை வெளியிட்டு குடியரசு தினத்தை கொண்டாடுகிறது. இந்த டூடுலில், செயற்கைக்கோள்கள் மற்றும் விண்வெளியில் உள்ள நட்சத்திரங்கள் இணைக்கப்பட்டுள்ளன. இது இந்தியாவின் அறிவியல் மனப்பான்மை, தொழில்நுட்ப வலிமை, எதிர்கால லட்சியங்களை பறைசாற்றும் விதமாக அமைந்துள்ளது.

News January 26, 2026

USA-வில் நுழைய முயன்ற 24,000 இந்தியர்கள் கைது

image

அமெரிக்காவிற்குள் சட்டவிரோதமாக நுழைவதில் இந்தியர்களும் சளைத்தவர்கள் இல்லை. கடந்த ஆண்டில் மட்டும் இப்படி நுழைய முயன்ற 23,830 இந்தியர்கள் பிடிபட்டுள்ளனர். அதாவது 2025-ல் சராசரியாக 20 நிமிடங்களுக்கு ஒரு இந்தியர் அமெரிக்க அதிகாரிகளிடம் சிக்கியுள்ளனர். 2024-ல் இது 85,119 ஆக இருந்த நிலையில், டிரம்ப்பின் கடும் நடவடிக்கையால் குறைந்துள்ளது. இவர்களில் பெரும்பாலானோர் வேலைத் தேடி சென்றவர்கள் தான்.

error: Content is protected !!