News May 2, 2024
பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்: ராகுல்

முன்னாள் பிரதமர் தேவகவுடா பேரனும், எம்பியுமான பிரஜ்வல் ஆபாச வீடியோ வெளியாகிப் பெரும் பரபரப்பைக் கிளப்பியது. ஆனால், இதுவரை பிரதமர் மோடி இதுகுறித்து எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை. இந்நிலையில், பிரஜ்வல் விவகாரத்தில் பிரதமர், பெண்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்திய ராகுல், சுமார் 400 பெண்களைக் கூட்டுப் பலாத்காரம் செய்த பிரஜ்வல் மோடியால் அங்கீகரிக்கப்பட்டவர் என விமர்சித்தார்.
Similar News
News March 10, 2026
நின்று கொண்டிருந்த டேங்கர் லாரி மீது பைக் மோதியதில் ஒருவர் பலி

ஊத்தங்கரை அடுத்த திருபத்தூர் சாலையோரத்தில் மார்ச்-8 டேங்கர் லாரி ஒன்று நின்று கொண்டிருந்தது. அப்போது அவ்வழியாக பள்ளிப்பட்டி பகுதியை சேர்ந்த சதீஷ்குமார் என்பவர் இருசக்கர வாகனத்தில் சென்று போது கட்டுப்பாட்டை இழந்து டேங்கர் லாரி மீது மோதினர். இதில் சதீஷ்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News March 10, 2026
புகழ்பெற்ற வரலாற்று ஆசிரியர் காலமானார்

நாட்டின் தலைசிறந்த வரலாற்று ஆசிரியர்களின் ஒருவரான KN பணிக்கர்(89) இன்று காலமானார். கேரளாவைச் சேர்ந்த அவர், நவீன இந்தியா, இந்தியாவின் மார்க்சிய வரலாறு தொடர்பாக எண்ணிலடங்கா நூல்களை எழுதியுள்ளார். அவரது 90-வது பிறந்தநாளை அடுத்த மாதம் சிறப்பாக கொண்டாட கேரள வரலாற்று ஆராய்ச்சி கவுன்சில் முடிவு செய்திருந்த நிலையில், மறைந்தது பெரும் சோகம். பணிக்கர் மறைவுக்கு தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். RIP
News March 10, 2026
இரவில் அரிசி சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்குமா?

இரவில் வளர்சிதை மாற்றம் குறைவதால், அரிசி சாப்பிட்டால் கொழுப்பு திரட்டலின் காரணமாக உடல் எடை அதிகரிக்கும் எனக் கூறப்படுகிறது. அறிவியலாக இதை அணுகுவோம். எடை அதிகரிப்பு என்பது உட்கொள்ளும் கலோரிகளுக்கும், எரிக்கப்படும் கலோரிகளுக்கும் உள்ள சமநிலையை பொறுத்து அமைவதாகும். இரவில் உடலின் செயல்பாடு குறையுமே தவிர, நிற்காது. அதனால், குறைவான கலோரிகளை எடுத்துக் கொள்ள அறிவியல் பூர்வமாக அறிவுறுத்தப்படுகிறது.


