News December 31, 2025
BREAKING: கூட்டணி.. EPS முடிவை மாற்றினார்

அதிமுக – பாஜக கூட்டணி மீது கிராமப்புற மக்கள் அதிருப்தியில் உள்ளதாக மா.செ கூட்டத்தில் EPS பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது. அத்துடன் SIR பணிகளில் அதிமுகவினர் சரியாக ஈடுபடவில்லை என பேசியுள்ள அவர், மக்கள் & களப் பணியில் முழுமையாக ஈடுபடவும் உத்தரவிட்டுள்ளார். மேலும், இனி கூட்டணி பற்றி தான் பார்த்துக்கொள்வதாக கூறிய அவர், மற்றவர்கள் யாரும் தலையிட வேண்டாம் எனவும் முடிவை மாற்றிக்கொண்டார் என கூறப்படுகிறது.
Similar News
News January 10, 2026
அரியலூர்: சடலமாக மீட்கப்பட்ட விவசாயி!

அரியலூர் மாவட்டம், விக்கிரமங்கலம் அருகே கொலையனூர் கிராமம் மேலத்தெருவை சேர்ந்தவர் விவசாயி சுந்தர்ராஜன் (70). இவர் மேலத்தெரு அருகே உள்ள தனது விவசாய நிலத்தில் கொட்டகை அமைத்து வாழ்ந்து வந்துள்ளார். சம்பவத்தன்று காலை சுந்தர்ராஜன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இதுகுறித்து அவரது மகன் ராஜதுரை, விக்கிரமங்கலம் போலீசில் அளித்த புகாரின் பேரில், தற்போது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
News January 10, 2026
தேர்தலில் புதியவருக்கு வாய்ப்பா? அண்ணாமலை

அரசியல் என்பது ஒரு படத்தின் மூலம் தீர்மானிக்கப்படும் விஷயமல்ல என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார். தேர்தலில் புதிதாக ஒருவருக்கு வாய்ப்பு கொடுத்து பார்க்கலாம் என இங்கி, பாங்கி போட்டு பார்க்க முடியாது என்றும் அவர் கூறியுள்ளார். திமுகவை அகற்ற வேண்டும் என முடிவெடுத்த பிறகு, ஆட்சியில் யார் அமர்ந்தால் அவர்களுக்கு ஆட்சி கொடுக்க தெரியும் என்பதை மக்கள் சிந்திக்க வேண்டும் எனவும் அவர் பேசியுள்ளார்.
News January 10, 2026
மக்கள் நாயகன் காலமானார்.. கண்ணீர் அஞ்சலி

சுதந்திர மூச்சுக்காற்றை சுவாசித்த காந்தியவாதி மா.வன்னிக்காளையின் (92) சுவாசம் நின்றுபோனது. உடல் தகனம் செய்யப்பட்டாலும், அவரது கருத்துகளும், போதனைகளும் ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு உத்வேகத்தை அளித்துக்கொண்டே இருக்கும். ஜனாதிபதியின் தேசிய விருது, தமிழக கவர்னரின் சிறந்த காந்தியவாதி விருது என பல்வேறு விருதுகளை பெற்றுள்ள அவருக்கு நம்முடைய ஆத்மார்த்தமான இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம்.


