News December 31, 2025
2025: இதுதான் பெஸ்ட் டெஸ்ட் அணியா?

ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் 2025-ஆம் ஆண்டின் சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் அணியை அறிவித்துள்ளது. அந்த அணி வருமாறு: கே.எல்.ராகுல்(IND), பென் டக்கெட்(ENG), டெம்பா பவுமா(SA- கேப்டன்), ஜோ ரூட்(ENG), சுப்மன் கில்(IND), ரவீந்திர ஜடேஜா(IND), அலெக்ஸ் கேரி (AUS- விக்கெட் கீப்பர்), சைமன் ஹார்மர்(SA), மிட்செல் ஸ்டார்க்(AUS), முகமது சிராஜ்(IND), ஜஸ்பிரித் பும்ரா(IND). நீங்க ஒரு பெஸ்ட் லெவனை கமெண்ட் பண்ணுங்க.
Similar News
News January 8, 2026
ஜனநாயகன் ரிலீஸாகாததால் ₹50 கோடி நஷ்டமா?

சென்சார் விவகாரத்தால் ‘ஜனநாயகன்’ தள்ளிப்போனது விஜய் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. இதனால் வணிக ரீதியாக ₹50 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. டிக்கெட் விற்பனை, முதல் நாள் வசூல் ₹30 – ₹32 கோடி வசூலை ஈட்டும் என்ற எதிர்பார்ப்பு, டிக்கெட் தொகை ரீஃபண்டிங் உள்ளிட்ட காரணங்களால் இந்த நஷ்டம் உண்டானதாக கோலிவுட் வட்டாரங்கள் கூறுகின்றன. நீங்க என்ன நினைக்கிறீங்க?
News January 8, 2026
நெஸ்லே பால் பவுடரில் நச்சுப்பொருள்: விளக்கம்

இந்தியாவில் விற்கப்படும் தனது பால் பவுடரில் நச்சு இல்லை. அவை பாதுகாப்பானவையே என நெஸ்ட்லே தெரிவித்துள்ளது. வாந்தி ஏற்படுத்தும் நச்சு பொருளான Cereulide கலந்திருக்கலாம் எனக்கூறி உலகின் பல நாடுகளில் தனது தயாரிப்பிலான பால் பவுடர்களை நெஸ்ட்லே திரும்ப பெற்றது. எனினும், இந்தியாவில் விற்கப்படும் அனைத்தும் உள்ளூரில் தயார் செய்வதால், அவற்றில் நச்சுப்பொருள் எதுவும் இல்லை என நெஸ்ட்லே உறுதி அளித்துள்ளது.
News January 8, 2026
505-ல் 404 வாக்குறுதிகளை முடிச்சிட்டோம்: RS பாரதி

திமுகவின் 5 ஆண்டுகால ஆட்சியில் 505 தேர்தல் வாக்குறுதிகளில் 404-ஐ நிறைவேற்றிவிட்டோம் என RS பாரதி தெரிவித்துள்ளார். சென்னையில் பேசிய அவர், அரசு ஊழியர்கள் பிரச்னையை தீர்த்துவிட்டோம். பொங்கல் பரிசு கொடுத்து விட்டோம். இதை எதிர்க்கட்சிகளால் தாங்க முடியவில்லை என்றார். மேலும், ஊழல் புகார் கொண்ட உலக மகா அயோக்கியர்களான அதிமுக Ex அமைச்சர்கள் தான் ஆளுநரிடம் மனு அளித்துள்ளனர் என்றும் விமர்சித்துள்ளார்.


