News December 31, 2025
ஆவடியில் நடைபெறும் மருத்துவ முகாம்

திருவள்ளூர்: ஆவடி மாநகராட்சி சார்பில் (ஜன.3) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை காமராஜ் நகர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மருத்துவ முகாம் நடைபெறுகிறது. மேலும் இதில் பல்துறை மருத்துவ ஆலோசனைகள், பரிசோதனைகள், மற்றும் மாற்றுத்திறனாளி சான்றிதழ் சேவைகள் இலவசமாக வழங்கப்படும். பொதுமக்கள் அனைவரும் பயன்பெறுமாறு தெரிவிக்கப்படுகிறது.
Similar News
News February 2, 2026
திருவள்ளூர் மக்களே 5 ஏக்கர் நிலம் வாங்க வாய்ப்பு!

பெண்கள் சொந்த நிலம் வாங்க தமிழக அரசு அறிமுகப்படுத்திய ‘நன்னிலம்’ திட்டத்தின் கீழ் 2.5- 5 ஏக்கர் வரையிலான நிலம் வாங்க 50% மானியத்துடன் கடனுதவி வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில், குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள்ளிருக்கும் 18 – 56 வயது வரை உள்ள பெண்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க விரும்புவோர் TAHDCO அலுவலகத்தில் நேரடியாக சென்றோ (அ) <
News February 2, 2026
திருவள்ளூர்: கடைகளில் வாங்கிய பொருட்கள் சரியில்லையா?

சில சமயம் நாம் கடைகளில் வாங்கும் பொருட்கள் தரமற்றோ, பழைய பொருட்களாகவோ வரலாம். இதை கடை ஓனர் மாற்ற மறுத்தாலோ (அ) பணத்தைத் தராவிட்டாலோ நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் புகார் செய்யலாம். வாங்கிய பொருள் 15 நாட்களுக்குள் சேதாரம் இல்லாமல், வாங்கிய நிலையில் இருந்தால், அதை மாற்ற, பணத்தைத் திரும்பப் பெற உரிமை உண்டு. மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு அலுவலரை (04116 – 27664823) தொடர்பு கொள்ளலாம்.ஷேர்
News February 2, 2026
போரூர் ஏரியில் ஆண் சடலம்!

திருவள்ளூர்: பூந்தமல்லி அருகே உள்ள போரூர் ஏரியில் நேற்று(பிப்.1) ஆண் சடலம் மிதப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் தீயணைப்புத் துறையினர் உதவியுடன் சடலத்தை மீட்டனர். இதனைத் தொடர்ந்து இறந்தவர் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இவர் தற்கொலை செய்து கொண்டாரா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.


