News December 31, 2025

திருப்பத்தூர் வாக்காளர்களுக்கு சூப்பர் UPDATE!

image

திருப்பத்தூர் மக்களே வரைவு வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் உள்ளதா? என்பதை அறிய மிகவும் எளிய வழி ‘1950’ என்ற எண்ணிற்கு SMS அனுப்பி தெரிந்துகொள்ளலாம். அதற்கு ‘ECI உங்கள் EPIC எண்’ (எ.கா.:- ECI SXT000001) என டைப் செய்து ‘1950’ என்ற எண்ணிற்கு அனுப்பினால், அடுத்த சில நொடிகளில் உங்களின் பெயர், வரிசை எண், பாகம், தொகுதி என அனைத்தும் குறுஞ்செய்தியாக வரும். இதனை அனைவருக்கும் அதிகமாக ஷேர் பண்ணுங்க!

Similar News

News January 12, 2026

திருப்பத்தூரில் சரமாரி தாக்குதல்!

image

கந்திலி, பெரியகரம் பகுதியை சேர்ந்தவர் பிரபு. இவரது மனைவி சகுந்தலா (வயது 35). இவருக்கும் அதே தெருவில் வசிக்கும் காமராஜர் மனைவி மகேஸ்வரி என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. நேற்று முன்தினம் இருவருக்கும் ஏற்பட்ட தகராறு, கைகலப்பாக மாறியது. இதுகுறித்து இருதரப்பும் கொடுத்த புகாரின் பேரில் மகேஸ்வரி, காமராஜ், சகுந்தலா, ராஜ்குமார் ஆகிய 4 மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

News January 12, 2026

திருப்பத்தூர்: வாலிபர் துடிதுடித்து பலி!

image

ஆம்பூர், விண்ணமங்கலம் பகுதியை சேர்ந்த வெங்கடேசன், நேற்று (ஜன.11) தனது பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது சான்றோர்குப்பம் பகுதியில் சாலையில் சென்ற காரை ஓட்டுநர் திடீரென நிறுத்திவிட்டு, கார் கதவை திறந்த போது, அதில், வெங்கடேசன் பைக் மோதியது. இதில் அவர் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இவரை பரிசோதித்த மருத்துவர்கள் இவர் மூளைச்சாவு அடைந்ததாக கூறினர். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News January 12, 2026

திருப்பத்தூர்: காவல்துறை இரவு ரோந்து பணி விவரம்

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று (ஜன.11) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யவும்.

error: Content is protected !!