News December 31, 2025
நாகை: மனைவி பிரிந்து சென்றதால் தற்கொலை

மன்னார்குடியை சேர்ந்தவர் சுதாகரன் (45). இவரது மனைவி ரம்யா. இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக ஏற்பட்ட தகராறில் ரம்யா, அவரது கணவரை விட்டு பிரிந்து சென்றதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த சுதாகரன் தேவூரில் உள்ள ரம்யாவின் சகோதரி வீட்டிற்கு சென்று, தோட்டத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கீழ்வேளூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News January 14, 2026
சமத்துவ பொங்கல் விழா – ஆட்சியர் பங்கேற்பு!

நாகை மாவட்டம் சிக்கல் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நாளை (14.01.2026) காலை 11 மணி அளவில் சமத்துவ பொங்கல் விழா மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தலைமையில் நடைபெற உள்ளது. இதில், சிக்கல் ஊராட்சியில் பணி புரியும் அரசு அலுவலர்கள் மற்றும் ஊராட்சி செயலர் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு செய்தி மக்கள் தொடர்பு துறையின் மூலமாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
News January 14, 2026
நாகை மாவட்டத்தில் பெய்த மழையின் அளவு!

நாகை மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருக்குவளையில் 9 சென்டி மீட்டர் மழையும், வேளாங்கண்ணியில் 7.7 செ.மி, வேதாரண்யத்தில் 7.5 செ.மி, திருப்பூண்டியில் 7 செ.மி, தலைஞாயிறு 5.4 செ.மி மற்றும் நாகப்பட்டினத்தில் 4.5 சென்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
News January 13, 2026
நாகை: குழந்தை வரம் அருளும் சங்காரண்யேஸ்வரர்!

நாகை மாவட்டம் அருகே மயிலாடுதுறையில் உள்ள தலைச்சங்காடு கிராமத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற சங்காரண்யேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. தேவாரப்பாடல் பெற்ற இக்கோயிலில் நீண்ட நாள் குழந்தை பேறு வேண்டுவோர், மூலவரான சங்காரண்யேஸ்வரரை வழிபட்டால் குழந்தை பேறு கிடைக்கும் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது. உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு இதை SHARE பண்ணுங்


