News December 31, 2025

கிருஷ்ணகிரி: மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!

image

கிருஷ்ணகிரியில் பணி, பயிற்சி மற்றும் மருத்துவ சிகிச்சைக்காக பயணம் செய்யும் மாற்றுத்திறனாளிகள், இலவசமாக பயணம் செய்ய பயண சலுகை அட்டை வழங்கப்பட உள்ளது. மேலும் மாற்றுத்திறனாளிகள் தங்களுக்கான தேசிய அடையாள அட்டை (UDID), ஆதார் அட்டை, பணி / பயிற்சி சான்றிதழ், புகைப்படம் ஆகிய ஆவணங்களுடன் இ-சேவை மையங்களில் TNEGA ஆன்லைன் முகவரியில் விண்ணப்பித்து இலவச பயண அட்டை பெறலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Similar News

News January 23, 2026

கிருஷ்ணகிரி: EB பில் எகுறுதா..?

image

கிருஷ்ணகிரி மக்களே உங்க கரண்ட் பில் அதிகமா வருதா..? இங்கு <>கிளிக் <<>>செய்து TNEB ‘பில் கால்குலேட்டரில் ’Domestic’ என்பதை தேர்ந்தெடுத்தால், இரண்டு மாதத்தில் ஓடிய மொத்த யூனிட்டை பதிவு செய்து 100 யூனிட் இலவச சலுகையுடன், நீங்கள் கட்ட வேண்டிய சரியான தொகையை காண்பிக்கும். ஒருவேலை உங்கள் பில் அதிகமாக வந்தால் 94987 94987 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம். (SHARE)

News January 23, 2026

அலியாளம் அணைக்கட்டில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

image

அஞ்செட்டி பகுதியில் உள்ள அலியாளம் அணைக்கட்டில் இருந்து 8 கிமி தூரம் வழுக்கு கால்வாய் அமைத்து தென்பெண்ணை ஆற்றில் வரும் உபரி நீரை சூளகிரி பகுதிகளுக்கு கொண்டு செல்லும் திட்டத்தை மாவட்ட ஆட்சியர் தினேஷ் குமார் ஜன-23 ஆய்வு செய்தார். இந்த திட்டம் மூலம் 12 ஏரிகள் நீர்பாசன வசதியை பெறவும் தர்மபுரி மாவட்டத்திற்கு தண்ணீர் பற்றாக்குறையை குறைக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

News January 23, 2026

கிருஷ்ணகிரி: சொந்த தொழில் தொடங்கணுமா?

image

சொந்தமாக ஒரு கடை வைக்கவோ, தொழில் தொடங்கவோ கையில் பணம் இல்லையே என்று கவலைப்படுபவர்களுக்கு ஒரு சூப்பர் திட்டம் உள்ளது. UYEGP திட்டத்தின் கீழ் ரூ.15 லட்சம் வரை கடனும், 25% மானியமும் வழங்கப்படுகிறது. 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றாலே போதும். தகுதியுள்ளோர் www.m<>smeonli<<>>ne.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பித்து பயன்பெறலாம். இந்த சூப்பரான தகவலை எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் SHARE பண்ணுங்க.

error: Content is protected !!