News December 31, 2025
நெட் இல்லாமலும் பணம் அனுப்பலாம் தெரியுமா

‘123PAY UPI’ மூலம் நெட் இல்லாமலும் பணம் அனுப்பலாம். ‘8045163666’ என்ற நம்பருக்கு கால் பண்ணுங்க. சேவையை தேர்வு செய்து, யாருக்கு பணம் அனுப்ப வேண்டுமோ, அவர்களின் போன் நம்பர் & எவ்வளவு பணம் என்பதையும் உள்ளிடவும். இதனை தொடர்ந்து UPI பரிவர்த்தனை செய்வதற்கான Confirmation call வரும். தகவல்களை சரிபார்த்து, UPI PIN எண்ணை கொடுத்தால், பணம் அனுப்பப்பட்டு விடும். இப்பதிவை நண்பர்கள் அனைவருக்கு ஷேர் பண்ணுங்க.
Similar News
News February 19, 2026
திமுகவுக்கு அதிர்ச்சி.. அதிமுகவில் இணைந்தார்…

மதுரை திமுகவில் முக்கிய முகங்களாக இருந்த திமுக நிர்வாகிகள் அடுத்தடுத்து அதிமுகவில் இணைந்து வருகின்றனர். மு.க.அழகிரியின் தீவிர விசுவாசியாக இருந்த <<19166028>>மதுரை மன்னன்<<>>, 2 நாள்களுக்கு முன்னர் அதிமுகவில் இணைந்தார். அவரைத் தொடர்ந்து, தற்போது மு.க.அழகிரியின் தீவிர ஆதரவாளரும், திமுக தலைமை செயற்குழு உறுப்பினருமான எஸ்.ஆர்.கோபியும், EPS முன்னிலையில் அதிமுகவில் இணைந்துள்ளார்.
News February 19, 2026
ஓடும் ரயிலில் மாணவியை வன்கொடுமை செய்த TTE

உ.பி.,யில் ஓடும் ரயிலில் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. என்சிசி தேர்வுக்காக அவசரமாக ஓடிவந்து கோரக்பூர்- அகமதாபாத் ரயிலைப் பிடித்த மாணவி, டிக்கெட் எடுக்கவில்லை. இதை அவர் TTE-யிடம் சொல்ல, உட்கார சீட் தருகிறேன் என்று அழைத்துப் போன அவர், ஏசி பெட்டியில் வைத்து மாணவியை பலாத்காரம் செய்துவிட்டு தப்பியுள்ளார். பாதுகாப்பு தரவேண்டியவரே இப்படி செய்தால்…?
News February 19, 2026
OPS-க்கு இப்படியொரு அர்த்தமா?

ஓய்வூதிய திட்டம் தொடர்பாக பேரவையில் EPS எழுப்பிய கேள்விக்கு, OPS பெயரை மறைமுகமாக குறிப்பிட்டு அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலளித்துள்ளார். பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வந்ததே அதிமுக ஆட்சியில் தான் என்று கூறிய அவர், OPS (ஓ.பன்னீர்செல்வம்) உங்களுக்கு பிடிக்கவில்லை என்பது வேறு; ஆனால், இந்த OPS (Old Pension Scheme) வேறு என்று நகைச்சுவையாக பதிலளித்தார்.


