News December 31, 2025
நாய்க்கடி: ஈரோட்டில் அதிர்ச்சி ரிப்போர்ட்

தமிழ்நாட்டில் தெரு நாய்கள் இதுவரை இல்லாத அளவிற்கு அதிகரித்து வருகிறது. தெருநாய்களின் அட்டகாசத்தால் தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பாதிப்படைந்து வருகின்றனர். இந்நிலையில் 2025-ம் ஆண்டில் ஈரோடு மாவட்டத்தில் 16,822 பேர் பாதிப்படைந்துள்ளனர். தெரு நாய் கடித்தால் அன்றே தடுப்பூசி போட வேண்டும்.
Similar News
News January 25, 2026
ஈரோட்டில் உச்ச கட்ட பாதுகாப்பு!

நாட்டின் 77-வது குடியரசு தின விழா நாளை (ஜன.26) கொண்டாடப்படுவதை முன்னிட்டு, ஈரோடு ரயில் நிலையத்தில் காவல்துறையினர் நேற்று முதல் தீவிர பாதுகாப்பு சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ரயில் நிலையத்திற்கு வரும் பயணிகளின் பைகள் மற்றும் உடைமைகள் மெட்டல் டிடெக்டர் கருவிகள் மூலம் தீவிரமாகப் பரிசோதிக்கப்பட்டன.
News January 25, 2026
கோபி அருகே விபத்து: ஒருவர் வலி!

கோபி அருகே உள்ள பொம்மநாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் மணி (வயது 40). தச்சு தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் வேலை விஷயமாக கோபியை அடுத்த சவுண்டப்பூருக்கு மோட்டார்சைக்கிளில் சென்றபோது நிலைதடுமாறி சாலையோர பள்ளத்தில் விழுந்து படுகாயம் அடைந்தார். உடனே அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கோபி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
News January 24, 2026
ஈரோடு: இரவு ரோந்து அதிகாரிகள் விபரம்

ஈரோடு மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கவும், இரவு நேர குற்றங்களைத் தடுக்கவும், மாவட்டக் காவல்துறை சார்பில் இன்று இரவு ரோந்துப் பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் அவசர உதவி தேவைப்படும் பொதுமக்கள், கீழ்க்கண்ட உதவி எண்களைப் பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. (ஷேர் பண்ணுங்க)


