News December 31, 2025

JUST IN: பல்லடம் அருகே நேருக்கு நேர் மோதி விபத்து

image

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் இருந்து பொள்ளாச்சி சென்ற அரசு பேருந்து நெகமம் அருகே சென்று கொண்டு இருந்த போது எதிரே வந்த பைக் மீது மோதாமல் இருக்க பேருந்தை திருப்பியுள்ளார். அப்போது, வந்த கார் மீது நேருக்கு நேர் மோதியது. இதில் காரின் முன் பகுதி மற்றும் பேருந்தின் முன்பகுதி சேதமடைந்தது. இவ்விபத்தால், பேருந்தில் வந்த பயணிகள் மாற்றுப் பேருந்தில் அனுப்பி வைக்கப்பட்டனர்.

Similar News

News January 2, 2026

திருப்பூர்: உங்க பெயரை மாற்றனுமா? SUPER NEWS

image

திருப்பூரில் உங்க பெயர் மாற்றம் செய்ய விண்ணப்பிக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு, பிறப்பு சான்று, பள்ளி கல்லூரி இறுதி சான்றிதழ் நகல், ஆதார் அட்டை நகல், வாக்காளர் அடையாள அட்டை நகல், குடும்ப அட்டை ஆகியவற்றுடன் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் இணையத்தில் விண்ணப்பிக்க <>இங்கு கிளிக் <<>>செய்யவும். தமிழில் பெயர் மாற்ற ரூ.150, ஆங்கில பெயர் மாற்ற ரூ.750 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. (SHARE பண்ணுங்க)

News January 2, 2026

பல்லடத்தில் அதிரடி நடவடிக்கை

image

பல்லடம் அடுத்த அறிவொளி நகர் வாய்க்கால் மேடு பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வழியே வந்த லாரி ஒன்றை மடக்கி பிடித்து லாரி ஓட்டுனரிடம் விசாரணை நடத்தினர். தொடர்ந்து லாரியை சோதனையிட்ட போது அதில் குட்கா பொருட்கள் இருந்து தெரிய வந்தது. மேலும் லாரி மற்றும் 500 கிலோ குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

News January 2, 2026

திருப்பூர்: வாடகை வீட்டில் வசிப்பவர்கள் கவனத்திற்கு

image

திருப்பூர், வாடகை வீட்டில் வசிப்பவர்கள், வாடகை உயர்வு, திடீர் வெளியேற்றம், முன்பண பிரச்சனை போன்ற பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். வாடகை வீட்டில் குடியிருப்போர் உரிமைகளை பாதுகாக்க தனி சட்டமே உள்ளது. உங்கள் வீட்டின் உரிமையாளர் அதிக கட்டணம் வசூலித்தாலோ அல்லது தொந்தரவு செய்தாலோ 1800 599 01234 என்ற தமிழக வீட்டுவசதித் துறையின் கட்டணமில்லா எண்ணில் புகார் அளிக்கலாம். (SHARE பண்ணுங்க)

error: Content is protected !!