News December 31, 2025
திருவாரூர் வரும் வெளிநாட்டு பறவைகள் அதிகரிப்பு

திருவாரூர் மாவட்டத்தில், வலசை வரும் பறவைகள் எண்ணிக்கை இந்த ஆண்டு அதிகரித்துள்ளது என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். வடுவூர் உதயமார்த்தாண்டபுரம் பறவைகள் சரணாலயம் மற்றும் முத்துப்பேட்டை அலையாத்திக் காடுகள் உள்ளிட்ட 25 நீர்நிலைகளில் எடுத்த முதற்கட்ட கணக்கெடுப்பின்படி 145 வகையான 1.08 லட்சம் பறவைகள் தங்கியுள்ளது என வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News January 8, 2026
திருவாரூர்: பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் விழா

திருவாரூர் மாவட்டம் திருவாரூர் நகராட்சிக்கு உட்பட்ட தெற்கு வீதி நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலையில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன், திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கே.கலைவாணன், நாகை நாடாளுமன்ற உறுப்பினர் வை.செல்வராஜ் ஆகியோர் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு பொங்கல் பரிசு பொருட்களை வழங்கினர்.
News January 8, 2026
திருவாரூர்: இனி வங்கி செல்ல தேவையில்லை!

உங்களது வங்கி கணக்கின் ACCOUNT BALANCE, STATEMENT, LOAN உள்ளிட்ட சேவைகளை வாட்ஸ்ஆப் வழியாக பெற முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? SBI (90226-90226), கனரா வங்கி (90760-30001), இந்தியன் வங்கி (8754424242), இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (96777-11234) இதில் உங்களது வங்கியின் எண்ணை போனில் SAVE செய்து, ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், தகவல்கள் அனைத்தும் வாட்ஸ்ஆப் வாயிலாக அனுப்பி வைக்கப்படும். SHARE NOW!
News January 8, 2026
திருவாரூர் மாவட்டத்தில் தேசிய திறனறித் தேர்வு

திருவாரூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது மாவட்டத்தில் வரும் 10-ம் தேதி சனிக்கிழமை அன்று 8-ம் வகுப்பு மாணவர்களுக்கான தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை தேர்வு நடைபெற உள்ளது. 18 தேர்வு மையங்களில் 4 ஆயிரத்து 907 மாணவ-மாணவிகள் இந்த தேர்வை எழுத உள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் மற்றும் பள்ளி கல்வித் துறையும் செய்துள்ளன.


