News December 31, 2025
செங்கை: காவல் அதிகாரிகள் அதிரடி மாற்றம்!

தமிழக காவல்துறையில் முக்கிய அதிகாரிகள் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளனர். தாம்பரம் மாநகர காவல் ஆணையராக A. அமல்ராஜ் நியமிக்கப்பட்டுள்ளார்; அங்கு பணியாற்றிய அபின் தினேஷ் மோடக் சிஐடி அமலாக்கப்பிரிவு ஏடிஜிபியாக மாற்றப்பட்டார். R. தினகரன் வண்டலூர் போலீஸ் அகாடமி ஏடிஜிபியாகவும், மகேஸ்வரி ஐஜியாகவும், செந்தில்குமார் ஆவடி மத்திய குற்றப்பிரிவு துணை கமிஷனராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
Similar News
News January 16, 2026
செங்கல்பட்டு: ஆட்டோவில் செல்வோர் கவனத்திற்கு!

செங்கல்பட்டு ஆட்டோக்கள் அதிக கட்டணம் வசூலிப்பதாக பொதுமக்கள் அடிக்கடி புகார் தெரிவிக்கின்றனர். விதிமுறைபடி ஆட்டோக்கள் முதல் 1.8 கி.மீ க்கு ரூ.25ம், அதற்கு மேல் செல்லும் ஒவ்வொரு கி.மீ க்கும் ரூ.12, காத்திருப்பு கட்டணம் 5 நிமிடங்களுக்கு ரூ.3.50 வசூலிக்கலாம். இரவு (11-5) நேரத்தில் 50% கூடுதலாக கட்டணம் வசூலிக்கலாம். இதை விட கூடுதல் கட்டணம் வசூலித்தால் <
News January 16, 2026
செங்கை: புறம்போக்கு நிலத்திற்கு பட்டா பெறுவது எப்படி?

ஆட்சேபனை இல்லாத அரசு புறம்போக்கு நிலம், அரசு நன்செய் & புன்செய், பாறை, கரடு, கிராமநத்தம், உரிமையாளர் அடையாளம் காணப்படாத நிலத்தில் வசிப்போர் ஆண்டிற்கு 3 லட்சத்திற்கு கீழ் வருமானம் இருப்பின் இலவச பட்டா பெறலாம். இந்த தகுதிகள் இருந்தால் கிராம நிர்வாக அலுவலரிடம் உரிய ஆவணங்களோடு விண்ணப்பத்தை அளிக்கலாம். இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களுக்கும் உடனே SHARE பண்ணுங்க!
News January 16, 2026
செங்கை: வாடகை வீட்டில் வசிப்பவரா நீங்கள்?

செங்கை வாடகை வீட்டில் குடியேறுபவர்கள் இதை தெரிந்து கொள்ளுங்கள். ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை உயர்த்த வேண்டும். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கேட்க வேண்டும். 11 மாதங்களுக்கு மேற்பட்ட குத்தகை ஒப்பந்தங்கள் சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும். வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன் அறிவிப்பு தர வேண்டும். இதை மீறுபவர்களை அதிகாரிகளிடம் (1800 599 01234) புகார் செய்யலாம். ஷேர்!


