News December 31, 2025

தலையீடு இல்லை: சீனாவுக்கு இந்தியா பதிலடி

image

ஆபரேஷன் சிந்தூரின் போது, இந்தியா-பாக்., இடையே மத்தியஸ்தம் செய்ததாக <<18719653>>சீனா தெரிவித்தது<<>>. இந்த கருத்தை இந்தியா திட்டவட்டமாக நிராகரித்துள்ளது. இருநாடுகள் இடையேயான பேச்சுவார்த்தையில் 3-ம் தரப்பு இடம்பெறவில்லை என்று இந்தியா மீண்டும் உறுதிபட தெரிவித்துள்ளது. சண்டை நிறுத்தம், இருநாடுகளின் ராணுவ நடவடிக்கைகளுக்கான தலைமை இயக்குநர்கள் ஆலோசித்த எடுத்த முடிவு என்றும் தெளிவுபடுத்தியுள்ளது.

Similar News

News February 16, 2026

தங்கம் விலை ₹90,000-க்கு கீழ் குறைகிறது.. REASON

image

USA-ரஷ்யாவுக்கு இடையிலான வர்த்தகம் டாலரில் நடந்தால் தங்கத்தின் விலை குறைய வாய்ப்புள்ளது என்று நிபுணர்கள் கணித்துள்ளனர். அப்படி நடந்தால், 10 கிராம் தங்கத்தின் விலை 2027-ம் ஆண்டின் இறுதிக்குள் ₹90,000 – ₹1 லட்சத்திற்கு இடையில் நிலைபெறக்கூடுமாம். ஆனால், தங்கம் விலை பல ஏற்ற இறக்கங்களை கண்ட பிறகே இந்த மாற்றம் ஏற்படும் என்கின்றனர். தற்போது, ​​10 கிராம் தங்கத்தின் விலை ₹1.45 லட்சமாக உள்ளது.

News February 16, 2026

FLASH: டெல்லி விரையும் செல்வப்பெருந்தகை

image

கூட்டணி விவகாரத்தில் இறுதி முடிவெடுக்க டெல்லியிலிருந்து வந்த அழைப்பின்பேரில் செல்வப்பெருந்தகை டெல்லி விரைந்துள்ளார். மேலும், கூட்டணி பேச்சுவார்த்தைக்காக குழு அமைத்த பிறகு, தலைமையின் உத்தரவை மீறி பொதுவெளியில் கூட்டணி தொடர்பாக கருத்து கூறி வரும் <<19148133>>மாணிக்கம் தாகூருக்கு<<>> எதிராக சில MLA-க்கள் கடிதம் கொடுத்துள்ளனர். அந்த கடிதங்கள் தொடர்பாகவும் தலைமையிடம் அவர் எடுத்துரைக்க உள்ளதாக கூறப்படுகிறது.

News February 16, 2026

சமஸ்கிருதம் தாய்மொழியாக இருக்கவே முடியாது: அமர்நாத்

image

சமஸ்கிருதம் என்பது பல மொழிகளில் இருந்து உருவாக்கப்பட்ட மதச்சடங்கு மொழி என இந்திய தொல்லியல் துறை இயக்குநர் அமர்நாத் ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சமஸ்கிருதம் யாருக்குமே தாய் மொழியாக இருக்காது என்ற அவர், ஒரு மொழி என்பது பெண்ணிடம் இருந்து தான் தோன்றும். ஒரு பெண் பேச முடியாத மொழி தாய்மொழியாக இருக்கவே முடியாது என கூறியுள்ளார். கடவுளை போற்றுவதற்காக தொகுக்கப்பட்டது சமஸ்கிருதம் எனவும் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!