News December 31, 2025

தென்காசி: கடைகளை உடைத்து பல லட்சம் கொள்ளை!

image

பாவூர்சத்திரத்தில் இருந்து கடையம் செல்லும் சாலையில் இயங்கி வரும் வணிக வளாகத்தில் செயல்பட்டு வந்த 2மளிகை கடைகள், செல்போன் உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் கடை என அடுத்தடுத்து மூன்று கடைகளின் கதவுகளின் பூட்டுகளை இரவில் மர்ம நபர்கள் உடைத்து பல லட்சம் ரொக்க பணம் மற்றும் 1.50 லட்சம் மதிப்பிளான சிகரெட் பாக்கெட்டுகள் கொள்ளை அடித்து சென்றுள்ளனர். பாவூர்சத்திரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News January 18, 2026

தென்காசி: பீர் பாட்டிலால் ஓட்டுநரின் மண்டை உடைப்பு

image

கடையம் அருகே வாசுகி நகர் பகுதியை சேர்ந்தவர் சுவேக் (30). மினி பஸ் டிரைவரான இவர் அதே பகுதியில் உள்ள தனியார் மது பாரில் மது அருந்த சென்றார். அப்போது கிழ கடையம் பகுதியை சேர்ந்த சரவணக்குமார் (23) என்பவருடன் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் சரவணக்குமார் பீர் பாட்டிலால் சுவேக் தலையில் அடித்ததில், அவரது மண்டை உடைந்து தென்காசி GH-ல் அனுமதிக்கப்பட்டார். கடையம் போலீஸார் சரவணக்குமாரை கைது செய்தனர்.

News January 18, 2026

தென்காசி: Spam Calls-க்கு இனி ‘எண்டு கார்டு’!

image

தென்காசி மக்களே, தினம் தினம் நாம் பிஸியாக இருக்கும் போது loan, credit card, Spam Calls மூலம் கடுப்பாகும் நிகழ்வுகள் நடக்கின்றன. இனி தேவையில்லாத அழைப்புளை அறவே தவிர்க்கலாம். 1909 என்ற எண்ணை அழைத்து உங்கள் விருப்பமான அழைப்புகளை தெரிவிக்கலாம். அல்லது, ‘START 0’ என 1909-க்கு ஒரு SMS அனுப்பினால் எந்த ஒரு Spam Call-லும் உங்களுக்கு வராது. இந்த பயனுள்ள தகவலை உடனே உங்க நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.

News January 18, 2026

தென்காசி: பாலத்தில் இருந்து தவறி விழுந்தவர் பலி

image

சிவகிரி அருகே அருளாட்சி என்ற திருமால்புரத்தை சேர்ந்தவர் செந்தில்குமார் (42). இவர் ராயகிரியில் உள்ள திருமண மண்டபம் அருகில் உள்ள பாலத்தில் அமர்ந்து மது குடித்ததாக கூறப்படுகிறது. அப்போது அவர் எதிர்பாராதவிதமாக பாலத்தில் இருந்து தவறி கீழே விழுந்து உயிரிழந்தார். இதுகுறித்து சிவகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!