News December 31, 2025

குமரி: கார் மோதி தொழிலாளி பரிதாப பலி!

image

அஞ்சுகிராமம் பகுதியை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். கட்டிட தொழிலாளி. இவர் நேற்று நெல்லைக்கு கட்டிட வேலைக்கு சென்று விட்டு பிராந்தநேரி குளக்கரை பகுதியில் வரும்போது பின்னால் வந்த கார் இவரது பைக் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட ராமகிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து அஞ்சுகிராமம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News

News January 13, 2026

குமரி: முதலை நடமாட்டம் குறித்து வனத்துறை விளக்கம்

image

திற்பரப்பு அருகே கல்லு வரம்பு பகுதியில் ஆற்றில் முதலைகள் நடமாட்டம் இருப்பதாக தகவல் பரவியது. மேலும் சமூக வலைதளங்களிலும் பாறை மீது முதலை இருப்பது போன்ற புகைப்படங்கள் வைரலான நிலையில் அவை பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது. இது வதந்தியாக இருக்க கூடும் என தெரிவித்துள்ள வனத்துறையினர் அப்பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

News January 13, 2026

கன்னியாகுமரி எஸ்பி கடும் எச்சரிக்கை

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் லாட்ஜுகள் மற்றும் ஆடம்பர வீடுகளை வாடகைக்கு எடுத்து அதில் ஸ்பா நடத்தி வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து அனுமதியின்றி ஸ்பா நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ்பி ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் இது தொடர்பாக பொதுமக்கள் காவல்துறைக்கு புகார் அளிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளார்.

News January 13, 2026

குமரி: பட்டா வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு

image

குமரி மக்களே உங்கள் இடம் அல்லது மனை கூட்டு பட்டாவில் இருந்தால் தனிப் பட்டாவை மாற்ற

1.கூட்டு பட்டா
2.விற்பனை சான்றிதழ்
3.நில வரைபடம்
4.சொத்து வரி ரசீது
5.மற்ற உரிமையாளர்களின் ஒப்புதல் கடிதம்
இந்த ஆவணங்களுடன்<> இங்கு க்ளிக்<<>> செய்து விண்ணப்பியுங்க. அதிகாரிகள் ஆய்வு செய்த பிறகு, 30 – 60 நாள்களில் தனி பட்டா கிடைத்துவிடும். அனைவருக்கும் SHARE செய்து தெரியப்படுத்துங்க..!

error: Content is protected !!