News May 2, 2024
தேர்தல் முடிவுக்குப் பிறகு சட்டப்பேரவைக் கூட்டம்

ஜூன் 2ஆவது வாரத்தில் சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் தொடங்க நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிப்ரவரி மாதம் பொது மற்றும் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அவையைத் தேதி குறிப்பிடாமல் சபாநாயகர் ஒத்திவைத்தார். தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு சட்டப்பேரவைக் கூட்டத்தொடரை நடத்தக் தமிழக அரசு முடிவு செய்துள்ளதாகக் கூறப்படும் நிலையில், அதற்கான ஏற்பாடுகள் தலைமைச் செயலகத்தில் தொடங்கப்பட்டுள்ளன.
Similar News
News January 31, 2026
மக்களை சந்திக்கிறார் விஜய்..!

பிப்ரவரி மாதத்தில் தவெக சார்பில் வேலூரில் விஜய் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இதற்கான உரிய அனுமதியை பெறும் நடவடிக்கை துவங்கியுள்ளதாம். காவல்துறையின் அனுமதி கிடைக்கும் பட்சத்தில் பிப்ரவரி 2-வது வாரத்தில் விஜய் மக்களை சந்திப்பார் என்கின்றனர். ஈரோடு பிரச்சாரத்திற்கு பிறகு சுமார் 2 மாதங்களுக்கு விஜய் மக்களை சந்திக்க திட்டமிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
News January 31, 2026
BREAKING: தங்கம் விலை சவரனுக்கு ₹7,600 குறைந்தது

தங்கம் விலை நேற்று முதல் குறையத் தொடங்கியுள்ளது. இந்நிலையில், இன்று (ஜன.31) 22 கேரட் தங்கம் 1 கிராம் ₹950 குறைந்து ₹14,900-க்கும், சவரனுக்கு ₹7,600 குறைந்து ₹1,19,200-க்கும் விற்பனையாகிறது. இதனால் நகைப்பிரியர்கள் மட்டற்ற மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சர்வதேச சந்தையில் இன்று தங்கம் விலை குறைந்ததால் மேலும் குறையவும் வாய்ப்புள்ளது.
News January 31, 2026
திமுக அரசுதான் டப்பா, டோப்பா எல்லாம் செய்கிறது: வானதி

NDA தேர்தல் பிரசார கூட்டத்தில் கூடிய லட்சக்கணக்கான கூட்டத்தை கண்டு திமுக மிகுந்த பதற்றத்தில் உள்ளதாக வானதி சீனிவாசன் கூறியுள்ளார். அதனால்தான் NDA கூட்டணியை டப்பா இஞ்சின் என்று அவர்கள் பேசுவதாக கூறிய அவர், டப்பா, டோப்பா எல்லாம் எங்களுக்கு தெரியாது; அவற்றை எல்லாம் திமுக அரசு தான் செய்கிறது என்றார். மேலும், TN-ஐ துயரத்தில் ஆழ்த்தும் திமுகவை வீட்டிற்கு அனுப்ப வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.


