News December 31, 2025
குமரியில் புத்தாண்டு கொண்டாட்டம் கட்டுப்பாடுகள்

குமரியில் புத்தாண்டு கொண்டாட்டம் தொடர்பாக மாவட்ட காவல்துறை பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்துள்ளன அவை பின்வருமாறு; கடலில் இறங்கி புத்தாண்டு கொண்டாட அனுமதி இல்லை, இருசக்கர வாகன சாகசங்கள் தொடர்பாக பொதுமக்கள் 7708239100 என்ற எண்ணில் தகவல் அளிக்கலாம்,18 வயதிற்க்கு கீழ் உள்ள இளஞ்சிறார்கள் வாகனம் ஓட்டினால் அவர்களின் பெற்றோர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படும்.
Similar News
News January 14, 2026
வாக்காளர் பட்டியில் பெயர் சேர்க்க 59,367 பேர் விண்ணப்பம்

குமரியில் புதிய வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இதுவரையிலும் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 59,367 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது. மேலும், வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்ள 12,670 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாக அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர். இம்மாதம் 18-ஆம் தேதி வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.
News January 14, 2026
குமரி மக்களே இலவச தையல் மிஷின் வேண்டுமா..?

குமரி மாவட்ட மக்களே, இலவச தையல் இயந்திரம் பெற அலையாமால் விண்ணப்பிக்க வழி உண்டு.
1. இங்கு <
2. Social Welfare என்பதை தேர்ந்தெடுக்கவும்.
3. “Sathiyavani Muthu Ammaiyar” திட்டத்தை தேர்வு செய்து, வருமான சான்று உள்ளிட்டவைகளை பதிவு செய்து விண்ணப்பியுங்க. வீட்டிலிருந்தே விண்ணப்ப நிலையை பார்க்கலாம். இதை மற்றவர்களும் பயனடைய SHARE பண்ணுங்க!
News January 14, 2026
குமரியில் பெண் கைது..!

குமரி சப்-இன்ஸ்பெக்டர் வினிஷ் பாபு கன்னியாகுமரி கடற்கரைப் பகுதியில் நேற்று (ஜன.13) ரோந்து பணி மேற்கொண்டார். அப்போது சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த மகேஸ்வரி என்பவரை சோதனை செய்தார். சோதனையின் போது அவர் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அதனை பறிமுதல் செய்த சப்-இன்ஸ்பெக்டர் மகேஸ்வரியை கைது செய்து வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


