News May 2, 2024

படத்தில் இருப்பவரை கண்டுபிடிங்க

image

மேலே படத்தில் இருப்பவர் தமிழ்நாட்டின் முன்னணி இசையமைப்பாளர். சமீப காலமாக தொடர்ந்து செய்திகளில் பேசப்படும் அவர், கோடையை சமாளிக்க மொரீஷியஸ் நாட்டிற்கு சுற்றுலா சென்றிருக்கிறார். அங்கு கடற்கரையில் நேரத்தைப் போக்குவது போன்ற போட்டோவை அவர் தனது X பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். இவர் யார் என்று கமெண்ட்டில் சொல்லுங்க.

Similar News

News September 2, 2025

தேர்தல் பரப்புரைக்காக மெகா பிளான் போடும் விஜய்

image

2 மாநாடுகளை நடத்திய தவெக தலைவர் விஜய், அடுத்ததாக தேர்தல் பரப்புரைக்கு திட்டமிட்டு வருகிறார். வருகிற 17-ம் தேதி பெரியார் பிறந்த நாளன்று மக்கள் சந்திப்பை தொடங்குவதே அவரது திட்டமாம். அதுவும் பெரியார் பிறந்த ஈரோடு மண்ணிலேயே பரப்புரையை தொடங்க உள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பனையூர் தவெக அலுவலகத்தில் பரப்புரை வாகனம் தயாராக நிறுத்தப்பட்டுள்ளது. விஜய்யின் பரப்புரை வியூகம் வெல்லுமா?

News September 2, 2025

இந்தியா இறங்கி வந்தது: டிரம்ப்

image

50% வரி விதித்தும் இந்தியா இறங்கி வராததால், தொடர்ந்து டிரம்ப் விமர்சித்து வருகிறார். வர்த்தக பேச்சுவார்த்தையில், அமெரிக்க பொருள்கள் மீது, தான் விதிக்கும் வரியை முற்றாக விலக்கிக் கொள்வதாக இந்தியா கூறியதாகவும், ஆனால், காலம் கடந்துவிட்டது என தான் ஏற்க மறுத்ததாகவும் டிரம்ப் தெரிவித்துள்ளார். இந்தியா- அமெரிக்க வர்த்தகம் என்பது ஒருதரப்புக்கு (அமெரிக்காவுக்கு) சேதாரமாக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

News September 2, 2025

இந்தியா கோல் மழை பொழிந்து வெற்றி

image

பிஹாரில் நடைபெறும் ஆசிய கோப்பை ஹாக்கியில் இந்திய அணி ஹாட்ரிக் வெற்றி பெற்றுள்ளது. இன்று குரூப் ஏ பிரிவில் இந்தியா-கஜகஸ்தான் அணிகள் மோதின. ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திய இந்தியா 15 கோல் அடித்தது. இறுதிவரை கஜகஸ்தான் அணி பதில் கோல் அடிக்கவில்லை. இதனால் இந்தியா 15-0 என்ற கணக்கில் வென்றது. சூப்பர் 4 சுற்றில் இந்தியா கொரியாவுடன் 3ஆம் தேதியும், மலேசியாவுடன் 4ஆம் தேதியும் மோதவுள்ளது.

error: Content is protected !!