News December 31, 2025
திருப்பத்தூர்: 10th போதும், போஸ்ட் ஆபீசில் வேலை!

இந்திய அஞ்சல் துறையில் கிளை போஸ்ட் மாஸ்டர், உதவி கிளை போஸ்ட் மாஸ்டர் & தபால் சேவகர் பணிகளுக்கு 30,000 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தமிழ் தெரிந்திருப்பது கட்டாயம். இந்த பணிக்கு தேர்வு கிடையாது; 10 ஆம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். விருப்பமுள்ளவர்கள் <
Similar News
News January 14, 2026
திருப்பத்தூர்: இளைஞர்களுக்கு உதவி தொகை!

திருப்பத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகளுக்கு மேலாக வேலை கிடைக்காமல் காத்திருக்கும் இளைஞர்களின் நலனுக்காக உதவித்தொகை வழங்கப்படுகிறது.
10 வகுப்பு தேர்ச்சி பெறாதவருக்கு ரூ. 200, தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.300 பட்டதாரிகளுக்கு ரூ.600 வழங்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் சிவசௌந்திரவள்ளி அறிவித்துள்ளார்.
News January 14, 2026
திருப்பத்தூரில் இலவச உடற்தகுதி பயிற்சி வகுப்புகள்

திருப்பத்தூரில், தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் இரண்டாம் நிலை காவலர், சிறை காவலர், மற்றும் தீயணைப்பாளர் பதவிக்கான இலவச உடற்தகுதி பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளது. மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வாழிகாட்டுதல் மையத்தால் நடத்தப்படும் இந்த பயிற்சி, கோடியூர் மைதானத்தில் ஜனவரி 26 வரை நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் சிவசௌந்திரவள்ளி அறிவித்துள்ளார்.
News January 14, 2026
திருப்பத்தூரில் போகிப் பண்டிகை கொண்டாடிய மக்கள்

திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று (ஜன.14) போகிப் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. பொது மக்கள் தங்கள் வீடுகளை சுத்தம் செய்து வீட்டில் உள்ள பழைய பொருட்களை தீயிட்டு கொளுத்தி போகிப் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். பின்னர் வீடுகளில் வேப்பில, ஆவாரம்பூ, பண்ணைப் பூ, மா இலை, ஆகியவற்றை தோரணமாக கட்டி அலங்கரித்து வருகின்றனர்.


