News December 31, 2025
வேலூர்: INDIA POST-ல் 30,000 காலிப்பணியிடங்கள்!

இந்திய அஞ்சல் துறையில் கிளை போஸ்ட் மாஸ்டர், உதவி கிளை போஸ்ட் மாஸ்டர் & தபால் சேவகர் பணிகளுக்கு 30,000 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு கண்டிப்பாக தமிழ் தெரிந்திருக்க வேண்டும், அதேபோல் சைக்கிள் ஓட்ட தெரிந்திருக்க வேண்டும். இந்த பணிக்கு தேர்வு கிடையாது; 10 ஆம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். விருப்பமுள்ளவர்கள் <
Similar News
News February 19, 2026
வாக்குச்சாவடி மையங்களில் கலெக்டர் ஆய்வு

வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலட்சுமி இன்று (பிப்ரவரி 19) சட்டமன்ற தேர்தல் முன்னிட்டு சேண்பாக்கம் அரசினர் நடுநிலைப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவராமன், தனித்துணை ஆட்சியர் திருமாறன், காட்பாடி வட்டாட்சியர் ஜெகதீஸ்வரன் உட்பட பலர் உடனிருந்தனர்.
News February 19, 2026
வேலூருக்கு வரும் பிரதமர் மோடி

பிரதமர் நரேந்திர மோடி மார்ச் மாதத்தில் மூன்று முறை தமிழகம் வர உள்ளார். முதலில் மார்ச் 1-ம் தேதி மதுரையிலும், பின்னர் மார்ச் 7-ம் தேதி வேலூரிலும், இறுதியாக மார்ச் 11-ம் தேதி திருச்சி மற்றும் தஞ்சாவூரிலும் பொதுக்கூட்டங்களில் பங்கேற்கிறார். வேலூர் வருகைக்கான தேதி மட்டும் மார்ச் 6-ம் தேதியிலிருந்து மார்ச் 7-ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.
News February 19, 2026
மத்திய சிறையில் 44 கைதிகளுக்கு அனுமதி!

வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள 44 இஸ்லாமிய கைதிகள் ரம்ஜான் நோன்பு தொடங்க அனுமதிக்க வேண்டும் என்று சிறை நிர்வாகத்திடம் மனு அளித்தனர். இதையடுத்து அவர்கள் நோன்பு இருக்க சிறை நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. இன்று (பிப்.19) முதல் 44 கைதிகள் ரம்ஜான் நோன்பு தொடங்க உள்ளனர். இதில் அதிகாலை 5 மணிக்கு மாலை 6:00 மணிக்கு மேல் உணவு வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


