News December 31, 2025
ஆம்பூரில் 2 பேர் அதிரடி கைது

ஆம்பூர் கன்னிகாபுரம் பகுதியைச் சேர்ந்த முனுசாமி என்பவரது வீட்டில், நேற்று முன்தினம் இரவு புகுந்த மர்ம நபர்கள் மின் மோட்டாரைத் திருடிச் சென்றனர். இது குறித்த புகாரின் பேரில் ஆம்பூர் டவுன் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் மோட்டார் திருட்டில் ஈடுபட்ட ஆம்பூர் பி கஸ்பா பகுதியைச் சேர்ந்த யோகன் (26) மற்றும் விக்னேஷ் (27) ஆகிய இருவரையும் போலீசார் நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Similar News
News January 16, 2026
திருப்பத்தூர்: பொங்கலன்று நேர்ந்த துயரம்!

ஆம்பூர் அடுத்த பெரியவரிகம் பகுதியில் நேற்று (ஜன.15) சாலையில் சென்ற இருசக்கர வாகனம் திடீரென கட்டுப்பாட்டை இழந்து, சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில், வந்த இரண்டு பேர் படுகாயமடைந்தனர். இந்த விபத்து குறித்து உமராபாத் காவல்துறையினர் விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.

வாணியம்பாடியில் பரபரப்பு

வாணியம்பாடி அருகே உள்ள நெக்குந்தி அரசு உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றி வந்த சி.பலராமன், நேற்று (ஜனவரி 15) சாலை விபத்தில் உயிரிழந்தார். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நேற்று காலை தனது சொந்த ஊருக்கு வாகனத்தில் சென்றபோது இந்த விபத்து நேரிட்டது. பட்டதாரி ஆசிரியரின் இந்தத் துயரமான மறைவு அப்பகுதி மக்களிடையேயும், கல்வி வட்டாரத்திலும் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.