News May 2, 2024

பாலம் கட்டும் பணிகளை துரிதப்படுத்திய அமைச்சர்

image

மன்னார்குடி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான புதுப்பாலத்தை அகற்றி அகலமான கான்கிரீட் பாலம் கட்ட தற்போது பணிகள் நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக பழைய குறுகிய கம்பி பாலம் உடைத்தெடுக்கும் பணி முடிவுற்றது. தற்போது புதிய அகலமான பாலம் கட்டும் பணி விவரங்களை தொழில் துறை அமைச்சர் ராஜா இன்று நேரில் ஆய்வு செய்து பணிகளை துரிதப்படுத்தினார். நகரமன்ற தலைவர் சோழராஜன் நகரசெயலாளர் வீரா கணேசன் உடனிருந்தனர்.

Similar News

News September 6, 2025

வெளிநாடு அனுப்பி வைப்பதாக கூறி பண மோசடி

image

மன்னார்குடி அடுத்த பரவாக்கோட்டை சேர்ந்த நவீன் சிங்கப்பூர் செல்வதற்காக சித்தி விநாயகர் என்பவரிடம் 3 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணத்தை கொடுத்துள்ளார். நவீனை வெளிநாட்டிற்கு அனுப்பி வைக்காமல் சித்தி விநாயகம் தலைமறைவானார் இந்நிலையில் சிங்கப்பூரிலிருந்து பெங்களூரு வந்த சித்தி விநாயகத்தை பரவாக்கோட்டை போலீசார் கைது செய்தனர்.

News September 6, 2025

திருவாரூர்: பட்டாவில் திருத்தமா? இனி ரொம்ப ஈஸி!

image

திருவாரூர் மக்களே, நில ஆவணங்கள் அனைத்தும் கணினிமயமாக்கப்பட்டு, பொதுமக்கள் எளிதாகப் பயன்படுத்தும் வகையில் eservices.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. இந்த இணையத்தில் உங்கள் நிலம் தொடர்பான விவரங்களை அறியலாம். மேலும் பட்டாவில் திருத்தம், பெயர் மாற்றம், நீக்கம் போன்ற சேவைகளுக்கு இதன் மூலமாக விண்ணப்பிக்கலாம். சந்தேகங்களுக்கு உங்கள் மாவட்ட அதிகாரியை 04366-223100 அணுகலாம். SHARE பண்ணுங்க!

News September 6, 2025

திருவாரூர்: இரவு ரோந்து காவலர்களின் விவரம்

image

திருவாரூர் மாவட்டத்தில் இன்று (செப்.,5) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகள் மற்றும் தொடர்பு எண்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. மேலும் இரவு நேர குற்றங்களை தடுக்க காவல் துறையின் உடனடி உதவிக்கு, இரவு ரோந்து காவல் அதிகாரிகளை அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யவும் என காவல்துறையின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!