News May 2, 2024

விஜய்க்கு NO; அஜித்துக்கு YES சொன்ன நடிகை

image

’GOAT’ படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாட நடிகை ஸ்ரீலீலா மறுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழில் தன்னுடைய அறிமுகம் ஒரு பாடலில் இருக்கக் கூடாது என அவர் நினைப்பதால், இந்த வாய்ப்பை நிராகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது. தற்போது அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ படத்தில் ஹீரோயினாக அவர் தமிழில் அறிமுகமாக உள்ளார். இவர் தெலுங்கில், மகேஷ் பாபு உள்ளிட்ட முன்னணி நடிகர்களோடு இணைந்து ஹிட் படங்களை கொடுத்தவர்.

Similar News

News February 3, 2026

திமுக ஆட்சியில் ரவுடிசம் அதிகரிப்பு: பாஜக

image

திமுகவின் ஆட்சியில் TN-ல் ரவுடியிசமும், வன்முறைகளும் அதிகரித்துவிட்டதாக வானதி ஸ்ரீனிவாசன் குற்றஞ்சாட்டியுள்ளார். தனது X பதிவில், தேனி மற்றும் ஓசூரில் பட்டப்பகலில் நடந்த குற்றச் சம்பவங்களை சுட்டிக்காட்டி, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதாக சாடியுள்ளார். மேலும், சர்வசாதாரணமாக கொலைகள் நடக்கும் அளவிற்கு தமிழகத்தை மாற்றியது தான் திராவிட மாடல் ஆட்சியா எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

News February 3, 2026

JEE 2-ம் கட்ட தேர்வு.. மாணவர்கள் கவனத்திற்கு

image

பொறியியல் படிப்புகளுக்கான JEE 2-ம் கட்ட தேர்வு ஏப்.1 தொடங்கி ஏப்.9 வரை நடைபெறவுள்ளது. இதற்கான ஆன்லைன் விண்ணப்பம் தற்போது தொடங்கியுள்ள நிலையில், விருப்பமுள்ள மாணவர்கள் பிப்.25-க்குள் jeemain.nta.nic.in தளத்தில் விண்ணப்பிக்கலாம் தேசிய தேர்வு முகமை என தெரிவித்துள்ளது. JEE மெயின் தேர்வை சுமார் 12 லட்சம் பேர் எழுதிய நிலையில், வரும் பிப்.12-ல் முடிவுகள் வெளியாகின்றன.

News February 3, 2026

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: ஊக்கமுடைமை ▶குறள் எண்: 600 ▶குறள்:
உரமொருவற்கு உள்ள வெறுக்கைஅஃ தில்லார்
மரம்மக்க ளாதலே வேறு.
▶பொருள்: மனத்தில் உறுதியான ஊக்கமில்லாதவர்கள் உருவத்தில் மனிதர்களாகக் காணப்பட்டாலும் மரங்களுக்கும் அவர்களுக்கும் வேறுபாடு இல்லை.

error: Content is protected !!