News December 31, 2025
ராணிப்பேட்டை: ரயில் மோதி திருநங்கை பரிதாப பலி!

புளியமங்கலம் ரயில்வே ஸ்டேஷன் அருகில் நேற்று டிச.30ம் தேதி திருநங்கை ஒருவர் ரயில் மோதி இறந்து கிடந்தார். ரயில்வே போலீசாருக்கு அந்த வழியாக சென்றவர்கள் தகவல் தெரிவித்தனர். போலீசார் திருநங்கை உடலை மீட்டு விசாரணை நடத்தினர். இதில் அரக்கோணத்தைச் சேர்ந்த திருநங்கை கந்தவேல் கவிதா என்பது தெரிந்தது. ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாரா ரயில் மோதி இறந்தாரா என ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.
Similar News
News January 24, 2026
இராணிப்பேட்டை காவல்துறை எச்சரிக்கை!

இராணிப்பேட்டை, ஜன. 24:ஆன்லைன் கடன் செயலிகள் (Loan Apps) மூலம் நடைபெறும் மோசடிகள் குறித்து பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு இராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.கூகுள் பிளே ஸ்டோரில் உள்ள அங்கீகரிக்கப்படாத கடன் செயலிகளைப் பதிவிறக்கம் செய்வதைத் தவிர்க்குமாறும், அச்செயலிகள் பயனர்களின் தனிப்பட்ட தகவல்கள் பகிர வேண்டாம் என்று மாவட்ட காவல்துறை செய்தி வெளியிட்டுள்ளது. உதவிக்கு 1930
News January 24, 2026
ராணிப்பேட்டை பெண்களே.. சொந்த காலில் நிக்கணுமா?

ஹோட்டல் அல்லது கேட்டரிங் தொழிலை தொடங்க நினைக்கும் பெண்களுக்காக, மத்திய அரசு ‘பிரதம மந்திரி அன்னபூர்ணா யோஜனா’ திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இதில் பயன்பெற விரும்பும் பெண்கள் அருகில் இருக்கும் வங்கிக்கு சென்று விண்ணப்பிக்கலாம். ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு 2 நாட்களுக்குள் உங்களது வங்கி கணக்கில் ரூ.50,000 வந்துவிடும். இதனை 3 ஆண்டுகளுக்குள் திரும்பி செலுத்தினால் போதும். உடனே ஷேர் பண்ணுங்க!
News January 24, 2026
ராணிப்பேட்டை மக்களே 5 ஏக்கர் நிலம் வாங்க வாய்ப்பு!

பெண்கள் சொந்த நிலம் வாங்க தமிழக அரசு அறிமுகப்படுத்திய ‘நன்னிலம்’ திட்டத்தின் கீழ் 2.5- 5 ஏக்கர் வரையிலான நிலம் வாங்க 50% மானியத்துடன் கடனுதவி வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில், குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள்ளிருக்கும் 18 – 56 வயது வரை உள்ள பெண்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க விரும்புவோர் TAHDCO அலுவலகத்தில் நேரடியாக சென்றோ (அ) <


