News December 31, 2025

தருமபுரி: தேங்காய் பறிக்க சென்றவர் பரிதாப பலி!

image

தருமபுரி: பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள மோளையானூரை சேர்ந்தவர் சிவராஜ் (65). மரம் ஏறும் தொழிலாளியான இவர், கோழிமேக்கனூர் பிரதீப் என்பவரின் தோட்டத்திற்கு தேங்காய் பறிக்க சென்றார். அப்போது எதிர்பாராத விதமாக கால் தவறி மரத்தில் இருந்து கீழே விழுந்தார். இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Similar News

News January 19, 2026

அறிவித்தார் தருமபுரி கலெக்டர்!

image

தருமபுரியில் படிப்பித்த வேலைவாய்ப்பு இல்லாதவர்களுக்கு உதவி தொகை வழங்கபட உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெறவில்லையெனில் மாதம் ரூ.200, தேர்ச்சி ரூ.300, 12-ஆம் வகுப்பு தேர்ச்சி ரூ.400, பட்டப்படிப்பு தேர்ச்சி ரூ.600 வழங்கப்படுகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கு 10-ஆம் வகுப்புக்கு ரூ.600, 12-ஆம் வகுப்புக்கு ரூ.750, பட்டப்படிப்பு ரூ.1000 பெற வேலைவாய்ப்பு அலுவலகத்தை அணுகவும்.

News January 19, 2026

தருமபுரி: கேஸ் மானியம் ரூ.300 பெறுவது எப்படி?

image

கேஸ் மானியம் ₹300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர, எல்பிஜி இணைப்பை ஆதார் அட்டையுடன் இணைக்க வேண்டும். உங்கள் கேஸ் வழங்குநரின் (Indane, HP, Bharat) இணையதளத்திற்குச் சென்று, ‘Link Aadhaar’ விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும். நுகர்வோர் எண், மொபைல் எண், ஆதார் ஆகிய விவரங்களை உள்ளிட்டு, OTP மூலம் இணைப்பை உறுதி செய்யலாம். இதன் மூலம் வீட்டில் இருந்தபடியே மானியத்தைப் பெறலாம். இதை மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்

News January 19, 2026

தருமபுரி உழவர் சந்தை விலை நிலவரம்

image

தருமபுரி உழவர் சந்தையில் இன்றைய (ஜன.19) காய்கறி விலை நிலவரம் வெளியாகியுள்ளது. அதன்படி (1-கிலோ) தக்காளி: ரூ.25, கத்தரிக்காய்: ரூ.20, வெண்டைக்காய்: ரூ.15, முள்ளங்கி: ரூ.15, அவரைக்காய்: ரூ.34, கொத்தவரை: ரூ.60, பச்சைமிளகாய்: ரூ.45, பப்பாளி: ரூ.30, கொய்யா: ரூ.50 மற்றும் முருங்கைக்கீரை (50-கிராம்) ரூ.15 என விற்பனை செய்யப்படுகின்றன.

error: Content is protected !!