News December 31, 2025

குமரி: ஓடும் பஸ்ஸில் ராணுவ வீரர் தற்கொலை!

image

குமரி, வெள்ளிச்சந்தை பகுதியை சேர்ந்த ராணுவ வீரர் கார்த்திக் (26) கடந்த 19ம் தேதி பெங்களூரில் இருந்து சொந்த ஊருக்கு பஸ்ஸில் வந்துள்ளார். வரும் வழியில் ஓடும் பஸ்ஸில் வைத்து விஷம் குடித்ததாக தெரிகிறது. இவர் இருக்கையில் அமர்ந்த படி மயங்கி விழுந்தார். இதனையடுத்து மருத்துவத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று முன் தினம் இறந்தார். தற்கொலைக்கான காரணம் குறித்து வெள்ளிச்சந்தை போலீஸார் விசாரனை.

Similar News

News January 24, 2026

குமரி: இரவு ரோந்து பணி அதிகாரிகள் விவரம்

image

இன்று (23.01.2026) கன்னியாகுமரி மாவட்ட இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி, இரவு நேரங்களில் வெளியில் பயணிக்கும் நபர்கள் ஆபத்தான சூழலில் மேலே அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ள எண்களை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. .

News January 23, 2026

குமரி: ரயில் நேரத்தில் மாற்றம்!

image

திருவனந்தபுரம் ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் தண்டவாள பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் காரணமாக, கன்னியாகுமரியிலிருந்து மங்களூரு செல்லும் பரசுராம் எக்ஸ்பிரஸ் ரயிலின் புறப்படும் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. ஜன. 26 அன்று அதிகாலை 3.45 மணிக்கு பதிலாக 4.45 மணிக்கு புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. *SHARE

News January 23, 2026

நாகர்கோவில்: 6ம் வகுப்பு மாணவனுக்கு பாலியல் தொல்லை!

image

நாகர்கோவிலில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்கள் தங்கும் விடுதியில் சமையல் வேலை பார்த்து வந்த சிவா என்பவர் அந்த விடுதியில் 6ம் வகுப்பு படிக்கும் மாணவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக நேசமணி நகர் போலீசார் 2017ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கை விசாரித்த போக்சோ நீதிபதி நேற்று சிவாவுக்கு 5 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார்

error: Content is protected !!