News December 31, 2025

திருப்பத்தூர்: வீட்டின் அருகில் குடியிருந்த மலைப்பாம்பு!

image

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த மேல்மாமுடிமாணப்பள்ளி விநாயகர் கோவில் வட்டத்தை சேர்ந்த செஞ்சி என்பவரின் வீட்டின் அருகில் நேற்று (30) சுமார் 6 அடி நீளமுள்ள மலைப்பாம்பு ஒன்று இருந்தது. உடனடியாக வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர் மலைப்பாம்பை பிடித்து காப்பு காட்டில் விட்டனர்.

Similar News

News January 14, 2026

திருப்பத்தூர்: இலவச அடுப்பு + சிலிண்டர் வேண்டுமா?

image

திருப்பத்தூர் மக்களே, மத்திய அரசின் உஜ்வாலா 2.0 திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின் தங்கிய பெண்களுக்கு அடுப்பு, கேஸ், ரெகுலேட்டர், குழாய், சிலிண்டர் என அனைத்துமே இலவசமாக வழங்கப்படுகிறது. இதற்கு ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் மற்றும் புகைப்படத்துடன் உங்கள் அருகில் உள்ள கேஸ் நிறுவங்களுக்கு நேரில் சென்றோ அல்லது<> இங்கே க்ளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். SHARE பண்ணுங்க!

News January 14, 2026

திருப்பத்தூர்: இளைஞர்களுக்கு உதவி தொகை!

image

திருப்பத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகளுக்கு மேலாக வேலை கிடைக்காமல் காத்திருக்கும் இளைஞர்களின் நலனுக்காக உதவித்தொகை வழங்கப்படுகிறது.
10 வகுப்பு தேர்ச்சி பெறாதவருக்கு ரூ. 200, தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.300 பட்டதாரிகளுக்கு ரூ.600 வழங்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் சிவசௌந்திரவள்ளி அறிவித்துள்ளார்.

News January 14, 2026

திருப்பத்தூரில் இலவச உடற்தகுதி பயிற்சி வகுப்புகள்

image

திருப்பத்தூரில், தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் இரண்டாம் நிலை காவலர், சிறை காவலர், மற்றும் தீயணைப்பாளர் பதவிக்கான இலவச உடற்தகுதி பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளது. மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வாழிகாட்டுதல் மையத்தால் நடத்தப்படும் இந்த பயிற்சி, கோடியூர் மைதானத்தில் ஜனவரி 26 வரை நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் சிவசௌந்திரவள்ளி அறிவித்துள்ளார்.

error: Content is protected !!