News May 2, 2024
புனித மூவரசர் தேவாலயத்தில் நவ நாள் கொடியேற்றம்

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே நேற்று பள்ளித்தம்பம் புனித மூவரசர் தேவாலயத்தில் நவ நாள் திருவிழா பங்குத்தந்தை சூசை சவரி யண்ணன் தலைமையில் சிறப்பு திருப்பலி மற்றம் கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கப்பட்டது. மே.9ஆம் தேதி காலையில் நவ நாள் திருப்பலி, மாலை 4.30 மணிக்கு பொங்கல் விழா இரவு 8 மணிக்கு மின்னொளி தேர் பவனி நடைபெற உள்ளது.
Similar News
News March 25, 2026
சிவகங்கை: NDA கூட்டணி போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு

தமிழக தேர்தல் திருவிழா கோலாகலமாக துவங்கியுள்ளது. இந்நிலையில் அதிமுக தலைமையிலான NDA கூட்டணியில் வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் பட்டியலை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சற்றுமுன் வெளியிட்டார். அதன்படி சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர்,மானாமதுரை தொகுதிகளில் பாஜகவும், காரைக்குடி தொகுதியில் அமமுகவும் போட்டியிடுகின்றன.
News March 25, 2026
மானாமதுரை: ஆகாஷ் கொலை வழக்கு; நீதிபதி காட்டம்

மானமதுரையில் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ஆகாஷ் விசாரணையின் போது உயிரிழந்த விவகாரத்தில் மதுரை ஐகோர்ட் கிளை மனுதாரருக்கு கேள்வி எழுப்பியுள்ளது. அனைத்து கோரிக்கைகளும் ஏற்கப்பட்டு இழப்பீடு வழங்கியும் உடலை பெறாமல் இருப்பது ஏன்? இறந்தவர் உடலை வைத்து போராட்டம் நடத்துவது தற்போது Fashion ஆகிவிட்டது. மேலும், இதை வைத்து அரசியல் செய்ய வேண்டாம் எனக் கூறி ஐகோர்ட் கிளை மனுதாரருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
News March 25, 2026
சிவகங்கை மக்களே.. இந்த நம்பரை மறக்காம SAVE பண்ணிக்கோங்க!

சிவகங்கை மக்களே அவசர கால 108 ஆம்புலன்ஸ் சேவை இனி Whatsapp மூலமாக பெறும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 9445030725 என்ற எண்ணை சேமித்து ‘Hi’ என அனுப்பவும். பிறகு Book Ambulance-ஐ தேர்வு செய்து send Location என கிளிக் செய்து Location-னை பகிரவும். கட்டுப்பாட்டு மையம் தொடர்புகொண்டு ஆம்புலன்ஸ் தகவலை வழங்கும். உயிருக்கு போராடும் நேரத்தில், லொகேஷன் தெரியாமல் அலைய வேண்டிய தேவையே இருக்காது. ஷேர் பண்ணுங்க!


