News December 31, 2025
ரூ.1 லட்சம் பரிசு: நாகை ஆட்சியர் அறிவிப்பு!

நாகை மாவட்டத்தில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் இயற்கை வளங்களை பாதுகாப்பதில் சிறப்பான பங்களிப்பு வழங்கிய தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு பசுமை முதன்மையாளர்கள் விருது வழங்கப்படுகிறது. விண்ணப்பிக்க கடைசி நாள் வருகிற ஜன.20 ஆம் தேதி ஆகும். இதில், ரூ.1 லட்சம் பரிசு வழங்கப்படும். இதற்கு <
Similar News
News January 14, 2026
நாகை: ரயில் சேவை வழக்கம் போல இயங்கும்!

இரயில்வே தண்டவாளம் பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று ஜன.14-ம் தேதி, பகுதி அளவு நிறுத்தப்படுவதாக இருந்த திருச்சி – நாகை – காரைக்கால் டெமு ரயில் மற்றும் காரைக்கால்- நாகை – திருச்சி டெமு ரயில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வழக்கம் போல இயங்கும் என தென்னக ரயில்வே பொதுமேலாளர் அலுவலக மக்கள் தொடர்பு அதிகாரி வினோத் தெரிவித்துள்ளார்.
News January 14, 2026
நாகை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

நாகை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில், வரும் ஜன.20-ம் தேதி பொதுமக்களுக்கான குரல் ஒப்புவித்தல் போட்டி , குரல் சார்ந்த ஓவிய போட்டிகள் நடைபெற உள்ளன. குரல் ஒப்புவித்தல் போட்டியில், ஒப்புவித்த குறள்களின் எண்ணிக்கை அடிப்படையிலேயே வெற்றியாளர்கள் தேர்வு செய்யப்படுவர். மேலும் விவரங்களுக்கு தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் 8754828470 எண்ணை தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
News January 14, 2026
நாகை: 220 கிலோ கஞ்சா பறிமுதல்

நாகை மாவட்டம், வேட்டைக்காரன் இருப்பு போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுப்பட்டனர். அப்போது அப்பகுதியில் 220 கிலோ கஞ்சா மூட்டைகளை கொண்டு சென்ற காரை மடக்கி பிடித்த போலீசார், ரூ.22 லட்சம் மதிப்புள்ள கஞ்சா மூட்டைகள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து வழக்கு பதிந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


