News December 31, 2025

அரியலூர்: கிராம நிர்வாக அலுவலர்கள் போராட்டம்

image

அரியலூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு, தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில், காத்திருப்புப் போராட்டம் நேற்று (டிச.30) மாலை நடைபெற்றது. இப்போராட்டத்தில், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தியும், கிராம நிர்வாக அலுவலரின் அலுவலகங்களை நவீனமயமாக்குதல் ஆகிய கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியும் இப்போராட்டம் நடைபெறுகிறது. இதில் 50-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

Similar News

News January 1, 2026

அரியலூர்: சோலார் பம்புசெட் வேண்டுமா?

image

தமிழக அரசு விவசாயிகளுக்கு 70% மானியத்தில் சூரிய ஒளியில் இயங்கும் பம்புசெட்டுகளை வழங்கி வருகிறது. 70 சதவீதத்தில், 40 % மாநில அரசும், 30% மத்திய அரசும் வழங்குகிறது. இதற்கு <>உழவன் App<<>> மூலமாக விண்ணப்பித்து, பெயரை முன்பதிவு செய்து கொள்ளலாம். மேலும் அறிய உங்கள் மாவட்ட வேளாண் பொறியியல் துறை அலுவலகத்தை அணுகவும். பிறரும் பயன்பெற SHARE செய்து உதவுங்க..

News January 1, 2026

அரியலூர் கூடுதல் மகிளா நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

image

எரக்குடி கிராமத்தைச் சேர்ந்த தம்பதிகள் பாக்கியராஜ்-ஆசைலட்சுமி மற்றும் சின்னசாமி-அம்பிகாபதி. இவர்களுக்கிடையே கடந்த ஆண்டு நடந்த தகராறின் போது பாக்கியராஜ்-ஆசைலட்சுமி தம்பதியரை, சின்னசாமி-அம்பிகாபதி தம்பதியர் தாக்கியுள்ளனர். இதுதொடர்பான வழக்கை நேற்று விசாரித்த அரியலூர் கூடுதல் மகிளா நீதிமன்றம், சின்னசாமிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், அம்பிகாபதிக்கு 3 மாதங்கள் சிறை தண்டனையும் வழங்கியுள்ளது.

News January 1, 2026

அரியலூர்: B.E படித்தவர்களுக்கு அரசு வேலை!

image

Bharat Electronics Limited (BEL) நிறுவனத்தில் காலியாக உள்ள Trainee Engineer-I பணியிடங்களை நிரப்பப்பட உள்ளன.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 119
3. வயது: 21 – 28
4. சம்பளம்: ரூ.30,000 – ரூ.40,000
5. கல்வித்தகுதி: B.E., / B.Tech., / B.Sc.,
6. கடைசி தேதி: 09.01.2026
7. விண்ணப்பிக்க: <>[CLICK HERE]<<>>
இந்த தகவலை மற்றவர்களும் பயன்பெற ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!