News December 31, 2025
புதுச்சேரி அரசின் முக்கிய அறிவிப்பு

புதுச்சேரி மாநிலத்தில் ரேஷன் கார்டுக்கு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரூ.1,000 பரிசுத் தொகையாக வழங்கப்படும் என புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது. இந்தத் தொகை ஜனவரி 3 முதல் வங்கிக் கணக்குகளுக்கு நேரடியாக வரவு வைக்கப்படும் என அறிவித்துள்ளனர். இந்தத் திட்டம் மாநிலத்தில் உள்ள அனைத்து குடும்பம் அட்டைக்கும் வழங்கப்படும். மேலும் பொங்கல் பண்டிகையை சிறப்பாகக் கொண்டாட உதவும் என்று அரசு தெரிவித்துள்ளது.
Similar News
News January 21, 2026
புதுவையில் இன்று மின்தடை ஏற்படும் பகுதிகள்

புதுவை லாஸ்பேட்டை மின்பாதையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் இன்று (21-01-2026) காலை 10 மணியிலிருந்து மாலை 4 மணி வரை அவ்வை நகரின் ஒரு பகுதி, ராஜாஜி நகர், அசோக் நகரின் ஒரு பகுதி மற்றும் அதனைசார்ந்த பகுதிகளில், அனைத்து மின் நுகர்வோர்களுக்கும் மின் விநியோகம் முற்றிலும் தடைபடுமென்று புதுச்சேரி மின்வாரியம் அறிவித்துள்ளது.
News January 20, 2026
புதுச்சேரி: இந்த கோயில் சென்றால் வெற்றி நிச்சயம்!

புதுச்சேரியில் மிகவும் பிரபலமான கோயில்களில் மணக்குள விநாயகர் கோயிலும் ஒன்று, இந்த கோயிலுக்குச் சென்றால் தடைகள் நீங்கும், ஞானம், வெற்றி, செழிப்பு கிடைக்கும், மன அமைதி உண்டாகும், புதிய முயற்சிகளுக்கு நல்ல தொடக்கம் கிடைக்கும், குழந்தை பாக்கியம், குடும்பத்தில் மகிழ்ச்சி போன்ற பல நன்மைகளை பெறலாம். இங்குள்ள விநாயகரின் அருள் மிகுந்த ஆற்றல் வாய்ந்ததாக நம்பப்படுகிறது. தெரியாதவங்களுக்கு SHARE பண்ணுங்க.
News January 20, 2026
3 மாத்திரைக்கு தடை விதித்த புதுவை அரசு

புதுச்சேரியில், 3 மாத்திரைகள் குறிப்பிட்ட தரத்தில் இல்லாத நிலையில், அவற்றை விற்பனை செய்ய அரசு தடை விதித்துள்ளது. புதுவை மருந்துக் கட்டுப்பாட்டுத் துறை அலுவலர் அனந்தகிருஷ்ணன், இதற்கான உத்தரவைப் பிறப்பித்துள்ளாா். மேலும் மாத்திரைகளை மருந்து கடைகளில் விற்பனை செய்யக்கூடாது எனவும், மருந்து கடைகளில் உள்ள இருப்புகளின் நிலவரத்தை மருந்துக் கட்டுப்பாட்டுத் துறைக்குத் தெரிவிக்க அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.


