News December 31, 2025
தேனி: முதியவருக்கு அரிவாள் வெட்டு!

போடி அருகே மீனாட்சிபுரம் பகுதியை சேர்ந்தவர் பாலு (62). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த அழகுராஜா என்பவருக்கும் பணம் கொடுக்கல் – வாங்கல் தொடர்பாக தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த அழகுராஜா, பாலுவை அரிவாளால் வெட்டினார். இதில் படுகாயமடைந்த பாலு தேனி அரசு மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து அழகுராஜா மீது போடி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.
Similar News
News January 14, 2026
தேனியில் திருக்குறள் வார விழா போட்டி- கலெக்டர் அறிவிப்பு

தேனி மாவட்டத்தில் திருக்குறள் கருத்துகள் அனைவரையும் சென்றடையும் வண்ணம் குறள் வார விழா கொண்டாடப்படவுள்ளது. அதன் ஒரு நிகழ்வாக பொதுமக்கள் மட்டும் கலந்து கொள்ளும் குறள் சார்ந்த ஓவியப் போட்டி மற்றும் குறள் ஒப்புவித்தல் போட்டிகள் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் 19.01.2026 அன்று காலை 10 மணிக்கு தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக புதிய கூட்டரங்கில் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
News January 14, 2026
தேனி: கஞ்சா விற்ற இளைஞர் கைது

தேனி மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் குற்றத் தடுப்பு சம்பந்தமாக கோடங்கிபட்டி பகுதியில் நேற்று (ஜன.13) ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அப்பகுதியை சேர்ந்த கௌதம் (25) என்பவர் விற்பனை செய்வதற்காக கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் இருந்த கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் கௌதம் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
News January 14, 2026
தேனி: இனி ரேஷன் கார்டு தேவையில்லை!

தேனி மக்களே, இனி ரேஷன் கடையில் பொருட்கள் வாங்க கையில் E- ரேஷன் கார்டு இருந்தா போதும். ஆம், இங்கே <


