News December 31, 2025

நெல்லையில் 16 ரவுடிகள் அதிரடி கைது!

image

2026 புத்தாண்டு இன்று இரவு கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு நெல்லை மாநகர் மற்றும் மாவட்டப் பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியை தீவிரப் படுத்தியுள்ளனர். இதில் 1345 ரவுடிகளை கண்காணிப்பு வளையத்தில் கொண்டு வந்துள்ளனர். மேலும் மாநகரில் 10 ரவுடிகளும், மாவட்டத்தில் 16 ரவுடிகளும் முன்னெச்சரிக்கையாக கைது செய்யப்பட்டு இரவு ரோந்து பணி தீவிர படுத்தப்பட்டுள்ளது.

Similar News

News January 26, 2026

நெல்லை: கிணற்றில் மிதந்த இளம்பெண் சடலம்

image

மானூர் குப்பனாபுரத்தை சேர்ந்த அந்தோணி என்பவருடைய மனைவி பக்கியத்தாய் (23). இவர் அப்பகுதியில் உள்ள தேவாலயத்திற்கு செல்வதாக கூறிவிட்டு வெளியே சென்றார். நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. மதியம் 3 மணியளவில் அதே பகுதியில் உள்ள கிணற்றில் சடலமாக மிதப்பத்தாக தெரிய வந்தது. தகவல் அறிந்து வந்த மானூர் போலீசார் உடலை கைப்பற்றி பாளை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து விசாரனை நடத்தி வருகின்றனர்.

News January 26, 2026

நெல்லை: 10th போதும்., ரிசர்வ் வங்கியில் ரூ.46,029 சம்பளம்

image

நெல்லை மக்களே, இந்திய ரிசர்வ் வங்கியில் காலியாக உள்ள 572 Office Attendant பணிகளுக்கான அறிவிப்பு வெளியாகின. 18 – 25 வயதுகுட்பட்ட 10ம் வகுப்பு படித்தவர்கள் பிப். 4க்குள் இங்கு <>க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். இதற்கு சம்பளம் ரூ..46,029 வழங்கப்படும். தேர்வு அடிப்படையில் தகுதியான நபர்கள் நியமனம் செய்யப்படுவர். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE செய்து தெரியப்படுத்துங்க.

News January 26, 2026

நெல்லையில் இரவு காவல் பணி அதிகாரிகள் விவரம்

image

திருநெல்வேலி மாவட்டத்தில் இன்று இரவு தொடங்கி நாளை காலை 6 மணி வரை இரவு நேர காவல் பணியில் உள்ள துணை காவல் கண்காணிப்பாளர் மற்றும் காவல் ஆய்வாளர்கள் விபரம் அவரது கைபேசி எண்களுடன் மாவட்ட காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரவு நேர காவல் சேவை தேவைப்படுபவர்கள் சம்பந்தப்பட்ட உட்கோட்டை காவல் ஆய்வாளர்களை அவர்களது கைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு சேவையை பெறலாம்.

error: Content is protected !!