News December 31, 2025

காஞ்சி: தீப்பிடித்து எரிந்த கார்; நூலிழையில் தப்பிய குடும்பம்

image

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அடுத்த மண்ணிவாக்கத்தை சேர்ந்தவர் டேனியல். இவர் தனது மனைவி மற்றும் மகனுடன் பிள்ளைப்பாக்கம் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, திடீரென காரின் முன்பக்கத்தில் இருந்து புகை வந்துள்ளது. இதையறிந்த அனைவரும் காரில் இருந்து இறங்கி தப்பித்தனர். கார் முழுவதும் தீப்பிடித்து எரிந்து நாசமானது. இது ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Similar News

News February 18, 2026

காஞ்சிபுரத்தில் மின்சாரப் பிரச்னையா..?

image

காஞ்சிபுரம் மின் பகிர்மான வட்டத்தில் காஞ்சிபுரம் வடக்கு, தெற்கு, ஸ்ரீபெரும்புதூர் மின் கோட்டங்கள் செயல்படுகின்றன. இந்நிலையில், நாளை(பிப்.19) காஞ்சிபுரம் வடக்கு கோட்ட மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம், ரயில்வே சாலையில் உள்ள செயற்பொறியாளர் அலுவலகத்தில் காலை 11:00 மணிக்கு நடைபெறுகிறது. இதில், உங்களது மின்சாரம் சார்ந்த எந்த வித குறைகளையும் தெரிவிக்கலாம். உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News February 18, 2026

காஞ்சிபுரம் கலெக்டர் உத்தரவிட்டார்!

image

2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. காஞ்சி, உத்திரமேரூர், ஆலந்தூர் மற்றும் திருப்பெரும்புதூர் ஆகிய தொகுதிகளில் உள்ள பதற்றமான மற்றும் பிரச்சனைக்குரிய வாக்குச்சாவடிகள் குறித்து இதில் ஆய்வு செய்யப்பட்டது. அங்கு கூடுதல் பாதுகாப்பு, கண்காணிப்பு கேமராக்கள் அமைத்து, தேர்தலை அமைதியாக நடத்த அதிகாரிகளுக்கு ஆட்சியர் உத்தரவிட்டார்.

News February 18, 2026

காஞ்சி: 2 வயது குழந்தை பரிதாப பலி!

image

காஞ்சிபுரத்தைச் சேர்ந்தவர் எழிலரசி. இவர், தனது 21/2 வயது ஆண் குழந்தை நெர்வின் மற்றும் உறவினர் கன்னியப்பன்(57) ஆகியோருடன் நேற்று(பிப்.17) இரவு மணிமங்கலம் பகுதியில் இருந்து ஆட்டோவில் முடிச்சூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த லாரி மோதியதில், கன்னியப்பன் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார். படுகாயமடைந்த குழந்தை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தது.

error: Content is protected !!