News December 31, 2025

விழுப்புரம்: பஸ் டயரில் சிக்கி மூதாட்டி பலி!

image

மரக்காணம் அடுத்த கோமுட்டிச்சாவடி குப்பத்தைச் சேர்ந்தவர் சத்தியமூர்த்தி மனைவி செந்தாமரை (70). இவர், அனுமந்தை இ.சி.ஆர்., ஓரத்தில் கொட்டகை அமைத்து மீன் விற்பனை செய்து வருகிறார்.நேற்று முன்தினம், புதுச்சேரியில் இருந்து மரக்காணம் நோக்கி வந்த தனியார் பஸ் கட்டுப்பாட்டை இழந்து மீன் கடையில் புகுந்தது. இதில் செந்தாமரை பஸ்சின் முன்பக்க டயரில் சிக்கி இறந்தார். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Similar News

News January 11, 2026

விழுப்புரம்: பல்லவர்கள் கட்டிய முதல் கோயில் எது தெரியுமா?

image

விழுப்புரம் மாவட்டம் மண்டகப்பட்டு எனும் ஊரில் உள்ளது திருமூர்த்தி கோயில். பல்லவ மன்னன் முதலாம் மகேந்திரவர்மனால் கட்டப்பட்ட இந்த கோயிலே பல்லவர்களின் முதல் குடைவரை கோயிலாக உள்ளது. கோயில் கட்டுமானத்தில் மலையை குடைந்து குடைவரை கோயில் அமைக்கும் முறையில் பெயர் போனவர்கள் பல்லவர்கள். அவர்கள் கட்டிய முதல் கோயில் என்பது இதன் சிறப்பு. விழுப்புரம் மாவட்ட பெருமையை மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க

News January 11, 2026

விழுப்புரம்: வருமான வரி துறையில் பணிபுரிய அரிய வாய்ப்பு!

image

இந்திய வருமான வரித்துறையில் விளையாட்டு வீரர்களுக்கு MTS, Stenographer, Tax Assistant Post பிரிவுகளில் காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு 10th, 12th, ஏதேனும் டிகிரி முடித்திருந்தால் போதும். மாத சம்பளம் ரூ.18,000 முதல் 81,100 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <>இங்கு க்ளிக் செய்து<<>> ஜன.31-குள் விண்ணப்பித்து கொள்ளலாம். சூப்பர் வாய்ப்பு. ஷேர் செய்யவும்.

News January 11, 2026

விழுப்புரம்: டூவீலர், கார் ஓட்ட தெரிந்தவரா நீங்கள்?

image

விழுப்புரத்தில் போலீசார் வாகனங்களை சோதனை செய்யும்போது லைசென்ஸ் கையில் இல்லை என்ற கவலை வேண்டாம். <>DigiLocker<<>>, M parivaahan போன்ற அரசின் செயலிகளில் RC புக், லைசென்ஸ் போன்ற ஆவணங்களை வைத்து கொண்டு, அதை சோதனையின்போது காண்பிக்கலாம். இந்த செயலி மூலம் காண்பிக்கும் ஆவணங்களை, காவல்துறையினர் ஏற்க முடியாது என்று சொல்ல முடியாது. சொல்லவும் கூடாது. ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!