News December 31, 2025

பொருளாதாரத்தில் இந்தியா சாதனை

image

ஜப்பானை பின்னுக்கு தள்ளி உலகின் 4-வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது. நாட்டின் பொருளாதார மதிப்பு 4.18 டிரில்லியன் டாலர்களாக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 2030-க்குள் ஜெர்மனியை பின்னுக்கு தள்ளி 3-வது இடத்தை இந்தியா பிடிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. 2025-26 நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் இந்தியாவின் GDP 8.2% ஆக வளர்ச்சி அடைந்ததாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Similar News

News January 27, 2026

நகைக்கடன்.. பிப்.1-ல் முக்கிய முடிவு

image

தங்கத்தின் விலை உயர்ந்து கொண்டே செல்லும் நிலையில், பிப்.1-ல் தாக்கல் செய்யப்படவுள்ள மத்திய பட்ஜெட்டில் நகைக் கடன் தொடர்பான விதிகளில் மாற்றம் கொண்டுவரப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. நகைக்கடன் வழங்குவதில் சில கொள்கை மாற்றங்கள் கொண்டுவரப்பட்டால், முத்தூட் பைனான்ஸ், மணப்புரம் பைனான்ஸ் போன்ற வங்கி சாரா நிதி நிறுவனங்கள், இன்னும் குறைந்த வட்டியில் நகைக் கடன்களை வழங்கலாம் என கூறப்படுகிறது.

News January 27, 2026

தவெக தேர்தல் அறிக்கை.. விஜய்யின் திட்டம்

image

தவெகவின் தேர்தல் அறிக்கையை தயாரிக்கும் அருண்ராஜ் தலைமையிலான குழுவுக்கு முக்கிய அறிவுறுத்தலை விஜய் வழங்கியுள்ளார். அக்குழுவானது தமிழகத்தின் வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு மற்றும் மத்திய மண்டலங்களுக்கு சென்று அனைத்து தரப்பினரின் கருத்துக்களையும் கேட்க வேண்டும் என தெரிவித்துள்ளார். அப்பணியை அக்குழுவினர் விரைவில் தொடங்க வேண்டும் எனவும் விஜய் உத்தரவிட்டுள்ளார்.

News January 27, 2026

கல்விக்கடன் ரத்து: திமுகவை சாடிய ராமதாஸ்

image

சில நாள்களாக திமுக அரசுக்கு எதிராக கருத்து கூறாமல் இருந்த ராமதாஸ், தற்போது கடுமையாக விமர்சித்துள்ளார். திமுக தன் தேர்தல் அறிக்கையில் தமிழ்நாட்டு மாணவர்கள் என குறிப்பிட்டுவிட்டு, கடந்த ஆண்டு பட்டியலின மாணவர்களின் கல்விக்கடனை மட்டும் தள்ளுபடி செய்துள்ளதாக குற்றம் சாட்டினார். வருங்காலங்களில் திமுக வாக்குறுதிகள் கொடுக்கும்போது, நிபந்தனைகளுக்கு உட்பட்டது என குறிப்பிட வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

error: Content is protected !!