News May 2, 2024
மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மழை

வட மற்றும் கொங்கு மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்ட அதே நேரம், இன்று மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. மழை பெய்யும்போது மணிக்கு 30 கி.மீ முதல் 40 கிலோமீட்டர் வரை காற்று வீசும். இதனால், மேற்கு தொடர்ச்சி மாவட்டங்களில் வெயில் தாக்கம் குறைந்து குளிர்ந்த காற்றும் வீசும்.
Similar News
News February 3, 2026
எதிர்க்கட்சிகளின் அமளியால் லோக் சபா ஒத்திவைப்பு

இந்திய – அமெரிக்க வர்த்தக விவகாரம் குறித்து பேச வேண்டும் என வலியுறுத்தி லோக் சபாவில் எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர். சபாநாயகரின் இருக்கை அருகே சென்ற காங்கிரஸ் உள்ளிட்ட இண்டியா கூட்டணி MP-க்கள், பாஜகவுக்கு எதிராக கோஷம் எழுப்பினர். இதனையடுத்து 12 மணிவரை அவை ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் அறிவித்தார்.
News February 3, 2026
50 ஆண்டுகளுக்கு பின் நிலவுப் பயணம்.. NASA-வுக்கு சிக்கல்

US-ல் இருந்து 50 ஆண்டுகளுக்கு பின் மனிதர்களை நிலவுக்கு சுமந்து செல்லும் ‘ஆர்டெமிஸ் -2’ விண்கலத்தின் கவுண்ட் டவுன் பாதியில் நிறுத்தப்பட்டது. ஹைட்ரஜன் லீக் காரணமாக இந்த தடை ஏற்பட்டுள்ளது. ஏற்கெனவே கடும் குளிர் காரணமாக பயணம் தள்ளிப்போன நிலையில் இப்போது புதிய பிரச்னை உருவாகியுள்ளது. சிக்கலை நாசா உடனடியாக சரிசெய்தால் பிப்.11-க்குள் நிலவு பயணம் சாத்தியமாகும், இல்லையென்றால் மார்ச்-க்கு தள்ளிபோகுமாம்.
News February 3, 2026
மக்கள் துணையோடு திமுக ஆட்சிக்கு முடிவு: EPS

அண்ணாவின் 57-வது நினைவு தினத்தையொட்டி, அசாத்திய வாழ்க்கை வாழ்ந்த சாமானிய மனிதன் அண்ணா என EPS புகழாரம் சூட்டியுள்ளார். அன்றைய கொடுங்கோல் காங்., ஆட்சியை வீழ்த்த, மக்களுக்கான கூட்டணி அமைத்து அண்ணா கண்ட வெற்றிதான், TN அரசியலை அடுத்த நூற்றாண்டுக்கு கட்டமைத்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதேபோல் மக்கள் துணையோடு திமுக ஆட்சிக்கு முடிவு கட்டுவோம் எனவும் தெரிவித்துள்ளார்.


