News December 31, 2025
காஞ்சிபுரம்: இரவு ரோந்து போலீசார் விவரம்!

காஞ்சிபுரம் மாவட்டத்தில், நெடு இரவு – இன்று (டிச.31) காலை வரை ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க!
Similar News
News January 13, 2026
காஞ்சி: ரூ.88 லட்சம் அபேஸ் செய்த மோசடி குடும்பம்!

விருகம்பாக்கத்தைச் சேர்ந்தவர் ரோகித்(37). தனியார் நிறுவன ஊழியரான இவரிடம் ஜாபர்கான்பேட்டையைச் சேர்ந்த ராஜசேகர் என்பவர் முதலீடு செய்யும் பணத்திற்கு அதிக லாபம் தருவதாக கூறியுள்ளார். இதையடுத்து, ரூ.88 லட்சம் பணத்தை ராஜசேகர் மனைவி பவித்ரா(28), தாய் இந்திரா(51) ஆகியோரிடம் கொடுத்துள்ளார். ஆனால், அவர்கள் பணத்தை தராமல் ரோகித்தை ஏமாற்றினர். இதில், ராஜசேகர், பவித்ரா, இந்திராவை போலீசார் கைது செய்தனர்.
News January 13, 2026
காஞ்சிபுரம்: இந்தியன் வங்கியில் ரூ.35,000 சம்பளம்! APPLY

காஞ்சிபுரம் மாவட்ட பட்டதாரிகளே.., இந்தியன் வங்கியில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தாலே போதுமானது. மாதம் ரூ.35,000 சம்பளம் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க ஜன.25ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் <
News January 13, 2026
காஞ்சிபுரம்: பொங்கல் பரிசு வரலையா..?

காஞ்சிபுரம் மாவட்ட மக்களே.., பொங்கல் பரிசு வழங்குவதில் குறைபாடு ஏற்பட்டாலோ, ஸ்டாக் இல்லை என அலுவலர்கள் பதிலளித்தாலோ, தரமாக இல்லையென்றாலோ 1967 (அ) 1800-425-5901-ஐ அழைக்கலாம். மேலும், பரிசு வாங்க ரேஷன் கடை திறந்திருக்கா எனத் தெரிந்துகொள்ள PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால், ரேஷன் கடை திறந்திருப்பது குறித்த தகவல் உங்களுக்கு மெசேஜாக வரும்.( SHARE IT)


