News December 31, 2025
சென்னையில் வடகிழக்கு பருவமழை 10சதவீதம் குறைவு

தமிழ்நாட்டில் இயல்பான நிலையில் 440 மி.மீ. மழை பொழியும் நிலையில் இன்று வரை 427 மி.மீ. மட்டுமே பெய்துள்ளது. சென்னையில் வடகிழக்கு பருவமழை நேற்று வரை இயல்பை விட 10 சதவீதம் குறைவாக பெய்துள்ளது. சென்னையில் இயல்பான நிலையில் 807 மி.மீ. மழை பொழியும் நிலையில் இன்று வரை 725 மி.மீ. மட்டுமே மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Similar News
News January 20, 2026
சென்னை: கழிப்பறையில் சடலமாக கிடந்த கதாசிரியர்

வடபழனி பஸ் நிலைய கழிப்பறையில், முதியவர் ஒருவர் இறந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. வடபழனி போலீசார், உடலை மீட்டு கே.கே நகர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை மேற்கொண்டனர். இதில், உயிரிழந்தவர் வடபழனி ஆற்காடு சாலையைச் சேர்ந்த கணேஷ் ராஜா(80) என்பதும், சினிமா கதாசிரியர் என்பதும், வடபழனி பேருந்து நிலையத்தில் இறங்கி, கழிப்பறைக்கு சென்றபோது மாரடைப்பால் உயிரிழந்தது தெரியவந்தது.
News January 20, 2026
சென்னை: ரூ.20 தந்தால் ரூ.2 லட்சம் கிடைக்கும்!

சென்னைமக்களே.., உங்களுக்கு ரூ. 2 லட்சம் காப்பீடு வழங்க மத்திய அரசின் பிரதான் மந்திரி சுரக்ஷா பீம யோஜனா திட்டம் அமலில் உள்ளது. இதற்கு ஆண்டிற்கு ரூ.20 மட்டும் செலுத்தினால் போதும். வங்கி கணக்கு வைத்திருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கான படிவத்தை <
News January 20, 2026
டெலிவரி நபர் மீது தாக்குதல் – EPS கண்டனம்

சென்னை வேளச்சேரியில் ZEPTO மளிகைப் பொருள் டெலிவரி செய்யும் பார்த்திபன் மீது, இருவர் நடுரோட்டில் அரிவாளால் கொலைவெறித் தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ள காணொளி நெஞ்சை பதைக்க வைக்கிறது என எடப்பாடி பழனிசாமி பதிவு செய்துள்ளார். “இன்னும் எத்தனை முறை தமிழக மக்கள் இப்படிப்பட்ட கொடூர காட்சிகளை காண வேண்டும் முதல்வர் அவர்களே” என கேள்வி எழுப்பியுள்ளார்.


