News December 31, 2025
புதுச்சேரியில் பாதுகாப்பு பணியில் 2000 போலீசார்

புதுச்சேரி போலீஸ் டி.ஐ.ஜி. சத்திய சுந்தரம் இன்று வெளியிட்டுள்ள செய்தியில்,
புதுச்சேரியில் புத்தாண்டை பொதுமக்கள் அமைதியாகவும், மகிழ்ச்சியாகவும் கொண்டாடும் வகையில் காவல்துறை பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. புத்தாண்டை தினத்தன்று 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். புதுச்சேரி முழுவதும் போக்குவரத்து போலீசார் குவிக்கப் பட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள்.
Similar News
News January 1, 2026
புதுவை: உங்க குழந்தைகளுக்கு மாதம் ரூ.4,000 வேண்டுமா?

மத்திய அரசின் ‘மிஷன் வாத்சல்யா’ குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 1 குடும்பத்திற்கு அதிகபட்சமாக 2 குழந்தைகளுக்கு மாதம் தலா ரூ.4,000 வீதம் 3 வருடத்திற்கு நிதி வழங்கப்படுகிறது. இதற்கு வருமான சான்றிதழ் போதும், பொது சேவை மையம் (CSC) அல்லது குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அலுவலகத்தில் நேரடியாக விண்ணப்பிக்கலாம். இந்த தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க…
News January 1, 2026
புதுவை: போலி ரசீது மூலம் ரூ.87 லட்சம் கையாடல்?

அரியாங்குப்பம், கொம்யூன் பஞ்சாயத்து முன்னாள் வட்டார வளர்ச்சி அலுவலர் விவேகானந்தன், கழிவறை கட்டுமான பணிகளில் ரூ.87 லட்சம் கையாடல் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. அவர் 2022-ம் ஆண்டு அரியாங்குப்பம் மற்றும் வில்லியனூர் பகுதிகளில் அரசு உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட கழிவறை திட்டத்தில் ரசீதுகள் மூலம் பணத்தை கையாடல் செய்ததாக புகார் பதிவு செய்யப்பட்டதையடுத்து, போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
News January 1, 2026
புதுவை: B.E படித்தவர்களுக்கு அரசு வேலை!

Bharat Electronics Limited (BEL) நிறுவனத்தில் காலியாக உள்ள Trainee Engineer-I பணியிடங்களை நிரப்பப்பட உள்ளன.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 119
3. வயது: 21 – 28
4. சம்பளம்: ரூ.30,000 – ரூ.40,000
5. கல்வித்தகுதி: B.E., / B.Tech., / B.Sc.,
6. கடைசி தேதி: 09.01.2026
7. விண்ணப்பிக்க: <
இந்த தகவலை மற்றவர்களும் பயன்பெற ஷேர் பண்ணுங்க!


