News December 31, 2025
தருமபுரியில் பெண்களுக்கான ஹாக்கி போட்டி துவக்கம்!

பாலக்கோடு அரசு மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில், மின்மினி ஹாக்கி குழு நடத்தும், மாநில அளவில் பெண்களுக்கான 20ம் ஆண்டு மாபெரும் ஹாக்கி போட்டி பாலக்கோடு திமுக நகர தலைவர் முரளி ஏற்பாட்டில், மு.அமைச்சர் பழனியப்பன் தலைமையேற்று இன்று (டிச.30) துவக்கி வைக்கப்பட்டது. பின், வீரர்களுடன் கலந்துரையாடி போட்டியை பார்வையிட்டார். உடன் விளையாட்டு வீரர்கள் & திமுக முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
Similar News
News January 13, 2026
தருமபுரி: நடத்துனர் மீது கொலைவெறி தாக்குதல்!

நல்லகுட்லஅள்ளியை சேர்ந்த பஸ் கண்டக்டர் அகிலரசன் (30). இவர் நேற்று முன்தினம் பஸ்சில் பயணித்த வினோத்குமாரிடம் (35) டிக்கெட் எடுக்கும்படி கூறினார். அதற்கு வினோத்குமார் “என்னிடமே டிக்கெட் கேட்கிறாயா?” என தகராறில் ஈடுபட்டார். பின் வினோத் பஸ் நிற்கும் போது கீழே கிடந்த கட்டையால் அகிலரசனை சரமாரியாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார். இதையடுத்து பாப்பிரெட்டிப்பட்டி போலீசார் வினோத்குமாரை கைது செய்தனர்.
News January 13, 2026
தருமபுரி: மாமனாரை கொன்ற மருமகன்!

தருமபுரி, எரங்காட்டு கொட்டாயை சேர்ந்தவர் ஆறுமுகம் (47) மருந்துக்கடை ஊழியராக உள்ளார். இவருக்கு ஜோதி என்கிற மனைவியும் 2 மகன்கள் & 2 மகள்கள் உள்ளனர். ஜன.7ம் தேதி மதிகோன்பாளைய ஏரியில் பிணமாக கிடந்தார். இதுகுறித்து தருமபுரி போலீசார் விசாரணை நடத்தினர். அதில், ஜோதிக்கும் அவரது மருமகனான சீதாராமனும் திருமணம் மீறிய உறவில் இருந்தது தெரியவந்தது. இதனை ஆறுமுகம் கண்டித்ததால், ஆறுமுகத்தை கொலை செய்தது தெரியவந்தது.
News January 12, 2026
தருமபுரி: ரூ.44,900 சம்பளத்தில் அரசு வேலை – உடனே முந்துங்கள்!

தருமபுரி மக்களே, இந்திய ரயில்வே துறையில் 8 பிரிவுகளின் கீழ் 312 காலிபணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு 12th முதல் டிகிரி வரை படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும், இதற்கு மாத சம்பளம் ரூ.19,900 முதல் ரூ.44,900 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் ஜன.29-க்குள் இங்கு <


