News May 2, 2024
தேர்தல் ஆணையத்தின் மீது முழு நம்பிக்கை

சமூக ஊடகங்களில் தேர்தல் கண்ணோட்டத்துடன் போலி வீடியோ பரப்பப்படுவதை தடுக்கக்கோரிய மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. தேர்தல் நேரத்தில் இந்த வழக்கு தொடர்பாக எந்த உத்தரவையும் பிறப்பிக்க விரும்பவில்லை என்று தெரிவித்த நீதிபதி, தேர்தல் ஆணையத்தின் மீது முழு நம்பிக்கை உள்ளதாகக் கூறினார். இந்த விவகாரத்தை பொறுத்தவரையில் தேர்தல் ஆணையமே இறுதி முடிவு எடுக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
Similar News
News February 2, 2026
மத்திய பட்ஜெட்.. சைலண்ட் மோடில் விஜய்

மத்திய பட்ஜெட்டை அதிமுக வரவேற்றுள்ள நிலையில், திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கடுமையாக விமர்சித்துள்ளன. இதனிடையே, பட்ஜெட் குறித்து விஜய் மட்டுமின்றி தவெக தலைவர்கள் யாரும் இதுவரை கருத்து தெரிவிக்கவில்லை. ஏற்கெனவே, சமூகம் சார்ந்த பல பிரச்னைகளுக்கு விஜய் தாமதமாக குரல் கொடுக்கிறார் என்ற குற்றச்சாட்டு உள்ளது. இன்று நடக்கும் தவெக 3-ம் ஆண்டு விழாவில் இதுபற்றி பேசுவாரா என எதிர்பார்க்கப்படுகிறது.
News February 2, 2026
இன்றைய நல்ல நேரம்

▶பிப்ரவரி 2, தை 19 ▶கிழமை: திங்கள் ▶நல்ல நேரம்: 6:30 AM – 7:30 AM & 4:30 PM – 5:30 PM ▶கெளரி நல்ல நேரம்: 9:30 AM – 10:30 AM & 7:30 PM – 8:30 PM ▶ராகு காலம்: 7:30 AM – 9:00 AM ▶எமகண்டம்: 10:30 AM – 12:00 PM ▶குளிகை: 1:30 PM – 3:00 PM ▶திதி: பிரதமை ▶பிறை: தேய்பிறை ▶சூலம்: கிழக்கு ▶பரிகாரம்: தயிர்
News February 2, 2026
TN அரசில் 709 வேலைவாய்ப்பு.. உடனே முந்துங்க

மாவட்ட ஊரக வளர்ச்சி அலுவலகங்கள், பஞ்சாயத்து ஒன்றியங்கள் மற்றும் வட்டார அலுவலகங்களில் மொத்தம் 709 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கையை தமிழக அரசு எடுத்துள்ளது. ஆபிஸ் அசிஸ்டண்ட், டிரைவர், நைட் வாட்ச்மேன் உள்ளிட்ட பணியிடங்களுக்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி போதுமானது. சம்பளமாக ₹15,700 வழங்கப்படும். ஆர்வமுள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ இணையதளம் வழியாக ஆன்லைனில் விண்ணப்பிக்க முடியும்.


