News May 2, 2024
சிசிடிவி பணிகளை ஆய்வு செய்த கலெக்டர்

விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதியில் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு இயந்திரங்கள் விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. அதனை கண்காணிக்கும் பொருட்டு சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அந்த கேமராவின் படக் காட்சிகளை கட்டுப்பாட்டு அறையில் இருந்து மாவட்ட ஆட்சியர் பழனி பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
Similar News
News March 12, 2026
விழுப்புரத்தில் சிலிண்டர் புக் செய்ய சிரமமா?

தமிழகத்தில் சிலிண்டர் புக் செய்வதில் சிரம நிலை தொடர்கிறது. இந்நிலையில், உங்களின் GPAY மூலமாகவே உங்களுக்கான சிலிண்டரை புக் செய்யலாம். GPAY செயலில் உள்ள கேஸ் புக்கிங் என்ற ஆப்ஷனை கிளிக் பண்ணுங்க. அதில், உங்களது பதிவு செய்யப்பட்ட மொபைல் நம்பர், அல்லது கேஸ் ஐடியை அளித்து லிங்க் செய்தால் போதும்,. உடனடியாக பணத்தை செலுத்தி புக் செய்யலாம். இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE!
News March 12, 2026
விழுப்புரத்தில் ரூ.5,000 வேண்டுமா..?

விழுப்புரம் மாவட்ட மக்களே.., உங்கள் வீட்டு இல்லத்தரசிகள் சுயமாக தொழில் தொடங்க உதவும் நோக்கத்தில், அரசு சார்பாக ‘கிரைண்டர் மானிய திட்டம்’ உள்ளது. இதன் மூலம், பெண்களுக்கு ரூ.5,000 மானியமாக வழங்கப்படுகிறது. இதற்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் உடனே உரிய ஆவணங்களுடன் மாவட்ட சமூக நல அலுவலகத்தை அணுகவும். இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க. யாருக்காவது உதவியாக இருக்கும்.
News March 12, 2026
எம்.எல்.ஏ செஞ்சி மஸ்தான் வழங்கினார்!

விழுப்புரம்: செஞ்சி ஊராட்சி ஒன்றியம், ஆலம்பூண்டி கிராமத்தில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு ஆலம்பூண்டியில் உள்ள குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் அரிசி வழங்கும் திட்டம் நடைபெற்றது. இதை செஞ்சி சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ் மஸ்தான் வழங்கினார். உடன் செஞ்சி ஒன்றிய பெருந்தலைவரும் ஒன்றிய செயலாளருமான ஆர்.விஜயகுமார், மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் முத்தம்மாள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


