News May 2, 2024

ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு மஞ்சள் அலர்ட்!

image

ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு இன்று (மே.02) மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இன்றும் நாளையும் வெப்ப அலை வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் மக்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகின்றனர். தமிழகத்தில் ஆங்காங்கு வெப்ப அலைக்கான ஆரஞ்சு அலர்ட்டும் முதன்முதலாக விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Similar News

News March 12, 2026

ராணிப்பேட்டையில் ரூ.5,000 வேண்டுமா..?

image

ராணிப்பேட்டை மாவட்ட மக்களே.., உங்கள் வீட்டு இல்லத்தரசிகள் சுயமாக தொழில் தொடங்க உதவும் நோக்கத்தில், அரசு சார்பாக ‘கிரைண்டர் மானிய திட்டம்’ உள்ளது. இதன் மூலம், பெண்களுக்கு ரூ.5,000 மானியமாக வழங்கப்படுகிறது. இதற்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் உடனே உரிய ஆவணங்களுடன் மாவட்ட சமூக நல அலுவலகத்தை அணுகவும். இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க. யாருக்காவது உதவியாக இருக்கும்.

News March 12, 2026

வாலாஜா அருகே பரிதாப பலி!

image

ராணிப்பேட்டை: வாலாஜாபேட்டை தாலுகா கல்மேல்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் கவுரி(48). கட்டுமானத் தொழிலாளியான இவர், நேற்று முன் தினம் வழக்கம் போல் பணிக்குச் சென்று விட்டு மாலை தனது உறவினருடன் பைக்கில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அம்மூர், அள்ளிக்குளம் அருகே சென்ற போது தீடீரென பைக்கில் இருந்து மயங்கி கீழே விழுந்தார். உடனே அவரை மருத்துவமனையில் அனுமதித்த போது, ஏற்கனவே இறந்ததாக தெரிவித்தனர்.

News March 12, 2026

ராணிப்பேட்டை: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று (மார்ச்- 11) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர், பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!