News December 31, 2025
சட்ட தன்னார்வலர்களுக்கு: பெரம்பலூரில் இலவச பயிற்சி

சட்ட தன்னார்வலர்கள் பெரம்பலூர் மாவட்ட சட்டப் பணிகள் ஆணை குழுவின் செயல்பாடுகள், பணிகள் குறித்து பொது மக்களிடம் எடுத்துரைக்க வேண்டும். மேலும் புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள சட்ட தன்னார்வலர்களுக்கான அறிமுகம் மற்றும் பயிற்சி வகுப்பில், பெரம்பலூர் மாவட்ட சட்டப்பணி ஆணைக்குழுவின் செயலாளரும், சார்பு நீதிபதியுமாகிய சரண்யா, மிகவும் பின்தங்கிய பொதுமக்களிடம் சட்ட விழிப்புணர்வு செய்ய அறிவுறுத்தினார்.
Similar News
News January 13, 2026
மாசு இல்லாத போகி பண்டிகை கொண்டாட வலியுறுத்தல்

பெரம்பலூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் போகிப் பண்டிகைக்கு முன் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், விழிப்புணர்வு பிரச்சாரத்தை தொடர்ந்து நடத்தி வருகிறது. அதன்படி பொதுமக்கள் அனைவரும் பிளாஸ்டிக், டயர், டியூப் போன்றவற்றை எரிக்காமல் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையில் போகிப் பண்டிகையை கொண்டாடுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் மிருணாளினி தெரிவித்துள்ளார்.
News January 12, 2026
பெரம்பலூர் மக்களே உங்களுக்கு தெரியுமா?

கண்ணகி தன் கணவருக்கு இழைக்கப்பட்ட அநீதியைக் கண்டு கோபம் கொண்டு மதுரையை எரித்த பின், மன அமைதியின்றி அலைந்து கொண்டிருக்கையில் சிறுவாச்சூரில் அமைதி கொண்டாள் எனவும், கண்ணகியைக் கொண்டு மதுரையை எரியூட்டிய மதுரை காளியம்மனே இத்தலம் விரும்பி அமர்ந்தாள் எனவும் கூறப்படுகிறது. மதுரை காளியம்மன் என்ற திருப்பெயரே பின்னாட்களில் மருவி மதுரகாளியம்மனாக வந்ததாகக் கூறப்படுகிறது. SHARE பண்ணுங்க.
News January 12, 2026
பெரம்பலூர்: EMI-ல் கார், பைக் வாங்கியோர் கவனத்திற்கு!

பெரம்பலூர் மக்களே, EMI-ல பைக், கார் வாங்குனீங்களா? உங்க வண்டிக்கு EMI முடிஞ்சும் இத மாத்தலனா உங்க வண்டி இன்னும் அடமானத்துல இருக்கிறதாக காட்டும். அத மாற்றுவதற்கு இங்கு க்ளிக் செய்து ‘தமிழ்நாடு Hypothecation Termination’ தேர்ந்தெடுங்க. பின்னர் வாகன எண், சேசிஸ் கடைசி 5 எண்கள், Form 35,வங்கி NOC பதிவு பண்ணுங்க. அதனை சரிபார்த்த பின் புதிய RC கிடைக்கும். இதனை மற்றவர்களுக்கும் SHARE செய்து உதவுங்க.!


