News December 31, 2025
கிருஷ்ணகிரி: இரவு ரோந்து பணி காவலர் விவரம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், நேற்று (டிச-30) இரவு 10 மணி முதல் இன்று (டிச.31) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
Similar News
News January 13, 2026
கிருஷ்ணகிரியில் ரிக் உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்

கிருஷ்ணகிரியில் ரிக் உரிமையாளர்கள் நேற்று (ஜன.13) முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ரிக் தொழிலில் உதிரி பாகங்கள், ஆயில், டீசல் உள்ளிட்டவற்றின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. இந்த விலை ஏற்றத்தை கட்டுக்குள் கொண்டு வர வலியுறுத்தி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக மாவட்ட ரிக் உரிமையாளர்கள் சங்க தலைவர் ஹைதர் அலி கூறியுள்ளார்.
News January 13, 2026
கிருஷ்ணகிரி: ஆடு, மாடு வளர்க்க ரூ.50 லட்சம் வரை மானியம்!

ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட கால்நடை வளர்ப்பில் விவசாயிகள் மற்றும் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில், மத்திய அரசு உத்யமி மித்ரா திட்டத்தை கொண்டுவந்துள்ளது. இதன் மூலம், கால்நடை பண்ணைகள் அமைப்பதற்கு ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர்<
News January 13, 2026
கிருஷ்ணகிரி: தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் ஆர்ப்பாட்டம்

கிருஷ்ணகிரி மாவட்ட நிா்வாகத்தை கண்டித்து தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சாா்பில் நேற்று (ஜன.12) பெருந்திரள் முறையீடு ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பூவத்தி பகுதி எஸ்.சி, எஸ்.டி. மக்களின் பயன்பாட்டில் உள்ள கோயிலையும், நிலத்தையும் அபகரிக்கும் நோக்கத்தோடு ஒரு பிரிவினா் திட்டமிட்டு செயல்படுவதாகவும் மாவட்ட நிா்வாகம் ஒருதலை பட்சமாக செயல்படுவதாகவும் கூறி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


