News December 31, 2025
திருத்தணி கொடூரத்தை கண்டு நெஞ்சம் பதறுகிறது: பா.ரஞ்சித்

திருத்தணியில் நடந்த கொடூர செயலை கண்டு நெஞ்சம் பதறுவதாக பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார். போதைப்பொருள் கலாச்சாரத்தை தடுக்க தவறிய ஆட்சியாளர்களின் மெத்தனப் போக்கே இதற்கு காரணம் எனவும், வடக்கன் என்கிற வெறுப்பு மனநிலையில் செயல்படுவது சமூக சீர்குலைவிற்கே வழிவகுக்கும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். மேலும், சமூக பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் ரீல்ஸ் பதிவிடுவோர் மீது நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தியுள்ளார்.
Similar News
News January 13, 2026
இனி வேலைக்கு ஆட்கள் எடுப்பது ஈஸி

சிறு, குறு நிறுவனங்கள், தொழில்முனைவோர், வணிகர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி! WAY2NEWS செயலியில் இப்போது ‘உள்ளூர் வேலைவாய்ப்புகள்’ அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. உங்கள் நிறுவனத்திற்குத் தேவையான ஆட்களை நேரடியாகத் தேர்வு செய்ய இது ஒரு சிறந்த வாய்ப்பு. உங்கள் உள்ளூர் வேலை விளம்பரங்களைப் பதிவிட இப்போதே கீழே உள்ள <
News January 13, 2026
ஸ்டிரைக் அறிவிப்பு.. தமிழக அரசுக்கு புதிய நெருக்கடி

தூய்மைப் பணியாளர்கள், ஆசிரியர்கள், ஊராட்சி செயலாளர்களை தொடர்ந்து, தமிழக அரசுக்கு நெருக்கடி கொடுக்க சத்துணவு ஊழியர்களும் தயாராகி வருகின்றனர். சிறப்பு காலமுறை ஊதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 8-ம் தேதி அடையாள போராட்டத்தை நடத்தினர். இந்நிலையில், பொங்கல் விடுமுறை முடிந்தவுடனே ஜன.20-ம் தேதி முதல், வேலை நிறுத்தம் செய்யப்போவதாக சத்துணவு ஊழியர்கள் அறிவித்துள்ளனர்.
News January 13, 2026
₹72 கோடி கொடுப்பதால் ‘கைதி 2’-ஐ ஓரங்கட்டினாரா லோகேஷ்?

சூர்யாவுக்கு சொன்ன ‘இரும்புக்கை மாயாவி’ கதையை அல்லு அர்ஜுனுக்கு சொல்லி லோகேஷ் ஓகே வாங்கியதாக சமீபத்தில் தகவல் வெளியானது. இந்நிலையில், அப்படத்தில் அவருக்கு ₹72 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாகவும், அடுத்த ஒரு மாதத்திற்குள் இது தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. இவ்வளவு சம்பளம் கொடுக்கப்படுவதால் தான் ‘கைதி 2’ படத்தை அவர் ஓரங்கட்டியதாகவும் சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது.


